பக்கம்:தமிழ் அங்காடி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124  தமிழ் அங்காடி


(அண்ணன் செயலாகிய உதவியால்) கிடைத்தது என்று சொல்லிக்கொண்டு சென்று இராமனின் திருவடிகளில் விழுந்து வணங்கினான்.

அரசுரிமை

விழுந்து பணிந்த வீடணனை இராமன் எழச் செய்து, இருக்கை அளித்து அமரச் செய்தான். பின், வீடணனை நோக்கி, பதினான்கு உலகமும் என் பெயரும் இருக்கும் வரையும் இலங்கைக்கு நீயே அரசன் என்னும் அரசுரிமையை நினக்குத் தந்தேன் என்றான்:

"ஆழியான் அவனை நோக்கி
அருள்சுரந்து உவகை கூர
ஏழினோடு ஏழாய் கின்ற
உலகும்என் பெயரும் எங்நாள்
வாழுநாள் அன்றுகாறும் வளை
எயிற்று அரக்கர் வைகும்
தாழ்கடல் இலங்கைச் செல்வம்
நின்னதே தந்தேன் என்றான்”. (140)

வாலியைக் கொல்வதற்கு முன் இதுபோலவே சுக்கிரீவனுக்கு இராமன் அரசுரிமை ஈந்தான் என்பது அறிந்த செய்தியே.

“ஓவியர்க்கு எழுத ஒண்ணா
உருவத்தன் உருமை யோடும்
கோவியல் செல்வம் முன்னே
கொடுத்து வாலியையும் கொன்றான்”
(பிணி வீட்டு படலம் - 81)

என்பது பாடல் பகுதி. (இது தொடர்பான விரிவான மூன்று பக்க விளக்கம், யான் எழுதிய 'சுந்தர காண்டச் சுரங்கம் என்னும் நூலின் 61, 62, 63ஆம் பக்கங்களில் தரப்பட்டு உள்ளது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/126&oldid=1204174" இலிருந்து மீள்விக்கப்பட்டது