பக்கம்:தமிழ் அங்காடி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சுந்தர சண்முகனார் 11


விழும். (சூழ்நிலை இயற்கையாயிருந்தால் இப்படித்தான் நிகழும்; சூழ்நிலை 'காற்று அடித்துச் செயற்கையாக மாறினால் இது மாறுபடலாம்.)

எனவே, கெப்லர், நியூட்டன் போன்றோரின் கண்டுபிடிப்பால், அரிஸ்ட்டாட்டில் என்னும் ஆனையின் அடிகள் சறுக்கின.

ஆசிரியர் பெருமை

தோட்டி முதல் தொண்டை மான் வரை ஆசிரியர்களிடத்திலிருந்துதான் வெளிவரல் வேண்டும். பேரரசர் ஒருவரையும் இவர் என் மாணவர் என்று சொல்லிக் கொள்ளும் பெருமை அவருடைய ஆசிரியர்க்கு உண்டு.

இந்தியா வரையும் படையெடுத்து வந்து பல நாடுகளையும் வென்ற மகா அலெக்சாந்தர் என்னும் பேரரசர் அரிஸ்ட்டாட்டிலின் மாணாக்கராவார். அரசர் ஆசிரியர்க்குத் தக்க மதிப்பளித்து அருமை பெருமையுடன் அணைத்து வந்தார்; அரிஸ்ட்டாட்டிலின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவினார். ஆசிரியரும் மாணவ அரசரிடம் உரிய முறையில் நடந்து கொண்டார்.

அலெக்சாந்தர் இறந்தவுடன் அரசியல் நிலைமையில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக அரிஸ்ட்டாட்டில் ஆதன்சு நகரை விட்டு வெளியேறித் தம் பணியைத் தொடர்ந்தார். இறுதியில், கி.மு; 322-ஆம் ஆண்டு பிணியால் பீடிக்கப்பட்டுத் தம் 62ஆம் அகவையில் வாழ்வை முடித்துக் கொண்டார்.

2. பகைவரால் பாராட்டப் பெற்றவர்

அறிமுகம்

தன்னலம் உடைய நண்பரையே நம்ப முடியாத இந்த உலகத்தில் பகைவரால் பாராட்டப் பெறுவது மிகவும் அரிது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/13&oldid=1203006" இலிருந்து மீள்விக்கப்பட்டது