பக்கம்:தமிழ் அங்காடி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  129


கெடுக்கிறாய். தேவரும் உன் தந்தை பெயரைத் தவிர வேறொன்றும் கூறார். உன் அறிவுமட்டும் என்ன கருதி இவ்வாறு வேலை செய்கிறது?- என்று கடிந்தார்.

"கெடுத்து ஒழிந்தனை என்னையும் உன்னையும்
கெடுவாய்ப்
படுத்து ஒழிந்தனை பாவி!எத்தேவரும் பகர்தற்கு
அடுத்தது அன்றியே அயல் ஒன்று பகர நின் அறிவின்
எடுத்தது என் இது என்செய்த வண்ணம் நீ என்றான்"
(24)

மகன் தன் பெயரைக் கூறாமல் நாராயணன் பெயரைக் கூறுவதை இரணியன் அறியின், ஆசான் முறையாகச் செயல்படவில்லையென்ற குற்றச்சாட்டின் பேரில் ஆசானது சீட்டுக் கிழிந்து விடும் -மேலும் பல தொல்லைகள் ஆசானுக்கு நேரும் - ஆதலின் 'பாவி' என விளித்தார்.

பிள்ளைகள் கல்வியில் திறமை பெறாவிடின் ஆசான் மேல் உலகம் குறைகூறுவதை இன்றும் காணலாம்-என்றும் காணலாம். எனவேதான் ஆசான் அஞ்சினார். 'குருவுக்கு மிஞ்சின சீடன்’ என்னும் பழமொழிக்கு ஏற்பப் பிரகலாதனுடைய நிலை காணப்பட்டது. அவன் ஆசானிடம் சொல்லலானான்.

ஆசானே! உம்மையும் என்னையும் கெடுத்ததாகச் சொல்கிறீர். அப்படி ஒன்றும் இல்லை. என்னையும் என் தந்தையையும் உம்மையும் இந்த உலகத்தையுமே உய்யச் செய்வதற்காகவே வேதத்தின் முதல் பெயரைக் கூறினேன். யான் மொழிந்ததில் என்ன குற்றம் உள்ளது?- என வினவினான்.

"என்னை உய்வித்தேன் எந்தையை
உய்வித்தேன் இணைய
உன்னை உய்வித்து இவ்வுலகையும்
உய்விப்பான் அமைந்து
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/131&oldid=1204182" இலிருந்து மீள்விக்கப்பட்டது