பக்கம்:தமிழ் அங்காடி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  131


சொல்லுவதுண்டு. இங்கே பாம்பு புகுந்ததுபோல் இருந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. காதில் கொசு, எறும்பு, சீயம்பாம்பு புகுவதுண்டு. பாம்பு புகுவது மிகவும் கொடியது.

நாராயணா என்பதைச் சொல்லிக் காட்டினால் தாம் நரகம் போகக் கூடும் - நாக்கு வெந்து விழும் - என்பதாக ஆசான் கூறியது அச்சத்தினால் எழுந்த பொய்யுரை யாகும்.

‘அரசன் எவ்வழி - குடிகள் அவ்வழி' என்னும் பழமொழிக்கு ஏற்ற செயல் எந்தக் காலத்திலும் இருக்கும் போலும். இன்றும், பல நாடுகளில் அரசாங்கத்தை எதிர்த்துப் பேசின், வேலை இழப்பு - கசையடி - இறப்பு ஒறுப்பு (மரண தண்டனை) முதலியன கிடைப்பதை உலகறியும். நிலையில்லாத அரசுத் தலைவர்களின் ஆட்சியிலேயே இப்படி என்றால், அரக்கனாகிய இரணியனுக்கு ஆசான் அஞ்சித் தடுமாறி உளறியதில் வியப்பில்லை.

பின்னர் இரணியன் மகனை அழைத்து வரச் செய்து நீ சொன்னது என்ன என வினவினான். உடனே பிரகலாதன் ‘நமோ நாராயணாய' என்பதைக் கூறி அதன் பெருமைகளைப் பலபட விரித்துரைத்தான். உடனே இரணியன் கூறலானான்:

உறங்குவான் பெயர்

மகனே! நீ ஒருவனது பெயரைச் சொல்கிறாயே - அவன் என்னிடம் பல முறை தோற்றவன். அவனது ஊர்தி கருடன். அவன் கருடனை விரைவாகப் பறக்கவிட்டு என்னிடமிருந்து தப்பிப் பிழைத்து ஓடியவன்; கடலுக்குள் புகுந்து மறைவாக இன்னும் அதிலேயே உறங்கிக்கொண்டிருப்பவன். அவனது பெயரா நன்மை பயக்கும் என்று என்னிடம் உலறுகிறாய்? இதை உனக்குக் கற்றுக் கொடுத்தவர் யார்? - என்றான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/133&oldid=1204186" இலிருந்து மீள்விக்கப்பட்டது