பக்கம்:தமிழ் அங்காடி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  135



மேலும் தொடர்கிறான்: திரு இல்லாத என் மகனே! படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலும் செய்யும் முதல்வன் நான் என்பதை நேருக்கு நேராகக் காட்சியளவையால் (பிரத்தியட்சப் பிரமாணத்தால்) அறிவதை விட்டு, என்னிலும் - உயர்ந்தவன் யாரோ இருக்கக்கூடும் என (உத்தேசமாகக்) கருதும் கருத்து அளவையால் (அனுமானப் பிரமாணத்தால் அறிவதை எந்த மறையிலிருந்து தெரிந்து கொண்டாய்?

“ஒருவன் யாவர்க்கும் எவற்றிற்கும்
உலகிற்கும் முதல்வன்
தருதல் காத்து அவை
தவிர்த்தல் என்றிவை செய்யத்தக்கோன்
கருமத்தால் அன்றிக் காரணத்தால்
உள்ள சாட்சி
திருவிலீ மற்றுஇது எம்மறைப்
பொருளெனத் தெரிந்தாய்?” (52)

தருதல், காத்தல், தவிர்த்தல் = படைத்தல், காத்தல், அழித்தல், கருமம் = காட்சியளவை. காரணம் = கருத்து அளவை தனக்குப் பின் அரசச் செல்வத்தை அடைய வேண்டிய பிரகலாதன் இவ்வாறு அழிந்து போக உள்ளானே என்று இரணியன் கருதியதால், மகனைத் திரு இலீ (திரு இல்லாதவனே) என விளித்தான்.

வேதாந்தத்தில் சொல்லப்படுகிற அத்து விதம், சோகம், தத்துவ மசி என்பனவற்றின் கருத்து, நானே கடவுள் - கடவுளே நான் என்பதாகும். மேலோடு நோக்கும் போது, இரணியன் கூறுவது அந்த வேதாந்தக் கருத்து போல் தோன்றினும் அதுவேறு - இதுவேறு.

இரணியன் என்ன சொல்லியும் எவ்வளவு கூறியதும் பிரகலாதன் பணியாததால், அவனைக் கொல்லும்படி ஆட்களை ஏவினான். எவ்வளவு முயற்சி செய்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/137&oldid=1204193" இலிருந்து மீள்விக்கப்பட்டது