பக்கம்:தமிழ் அங்காடி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136  தமிழ் அங்காடி


பிரகலாதனைக் கொல்ல முடியவில்லை. மீண்டும் பிரகலாதன் தந்தைக்குக் கூறுகிறான்:

தந்தையே நாராயணன் மலரில் மணம் போலவும் எள்ளில் எண்ணெய் போலவும் எங்கும் எல்லாப் பொருள்களிலும் மறைய உள்ளான்:

"மலரினில் வெறியும் எள்ளில் எண்ணெயும் மான எங்கும்
அலகில் பல்பொருளும் பற்றிமுற்றிய அரிகாண் அத்தா”

வெறி = மணம். மான = போல. இ ங் கே, நாவுக்கரசரின் தேவாரத்தில் உள்ள -

“விறகில் தீயினன் பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளான் மாமணிச் சோதியான்”

என்னும் பாடல் பகுதி ஒப்பு நோக்கத்தக்கது. விறகில் தீயும் பாலில் நெய்யும் மறைந்திருப்பது போல் இறைவன் எங்கும் எதிலும் மறைந்துள்ளானாம். வாழை மரத்தில் தீ இல்லை - காய்ந்த விறகுக் கட்டைக்குள் தீ உள்ளது - அதனால் தான் தீ மூட்டியதும் விறகு எரிகிறது. எரியக் கூடிய பொருள்களில் எல்லாம் ஞாயிற்றின் வெப்பம் உள்ளது என்பது ஒரு வகை அறிவியல் கருத்து. மற்றும்,

“வண்ணப் பூவும் மணமும் போல
மகர யாழும் இசையும் போல”

என்னும் பாரதிதாசனது பாடல் பகுதியும் ஒரு சிறிது ஒப்பு நோக்கத்தக்கது.

தூணிலும் இருப்பான் எனப் பிரகலாதன் கூற, இரணியன் ஒரு தூணை உதைத்தான். அதிலிருந்து நரசிங்கம் தோன்றிற்று. நரசிங்கத்திற்கும் இரணியனுக்கும் போர் மூண்டது. இரணியனால் நரசிங்கத்தை வெல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/138&oldid=1204198" இலிருந்து மீள்விக்கப்பட்டது