பக்கம்:தமிழ் அங்காடி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142  தமிழ் அங்காடி


மனைவி (சீதை). இந்த 'மாண்ட இல்’ என்பது, புறநானூற்றில் பிசிராந்தையார் பாடியதாக உள்ள

“மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்"

என்னும் பாடல் பகுதியில் உள்ள 'மாண்ட என் மனைவி' என்னும் தொடரை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததாகும். 'மாண்ட' என்பதற்கு 'இறந்த’ என்னும் பொருளும் உண்டு. 'இறந்த’ என்னும் பொருளில் உள்ள 'மாண்ட' என்பதன் வேர்ச் சொல் 'மாள்’ என்பது. 'மாட்சிமைப்பட்ட - சிறந்த’ என்னும் பொருளில் உள்ள மாண்ட என்பதன் வேர்ச்சொல் மாண்’ என்பதாகும்.

இராமன் மேலும் கூறுகிறான்:

இராமன் வலி இழந்த வில்லை உடையவன்; மனைவியைப் பறிகொடுத்த ஏமாளி; அதனால் வீரம் இல்லாதவன் என்று என்னை இகழ்ந்து வருணன் வரவில்லையோ? (பாடல் 10)

கரந்து கோடல்

ஒருவரின் உதவியை அவரோடு ஒத்துழைத்துப் பெறுதல், போரிட்டு வென்று பெறுதல், அவரை இடம் விட்டு இடம் பெயர விரட்டிப் பெறுதல், இரந்து (கெஞ்சி யாசித்துப்) பெறுதல் ஆகிய இவற்றுள் எதுவும் ஒத்து வராது. நாமாக எப்படியாவது கரந்து (சொல்லாமல் மறைத்துக்) கொள்ளுதலே சரியாகும். வருவனை வேண்டிப் பயனில்லை.

“புரந்து கோடலும் புகழொடு கோடலும் பொருது
துரந்து கோடலும் என்றிவை தொன்மையின்
தொடர்ந்த
இரந்து கோடலின் இயற்கையும் தருமமும் எஞ்சக் :கரந்து கோடலே நன்றினி நின்றதென் கழறி” (11)

புரந்து கோடல் = ஒத்துழைத்து உதவியாயிருந்து கொள்ளுதல். துரந்து கோடல் = வேறிடம் துரத்திவிட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/144&oldid=1204208" இலிருந்து மீள்விக்கப்பட்டது