பக்கம்:தமிழ் அங்காடி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144  தமிழ் அங்காடி


தோற்றுவிட்டனர். அப்போது நம்மவர் ஒருவர் பின்வருமாறு கூறினார்: ஆட்டுக் கறியும் மாட்டுக் கறியும் பன்றிக் கறியும் சாப்பிடும் வலிமை மிக்க வெள்ளையர்களை, வெண்டைக் காயும் சுண்டைக் காயும் வாழைத் தண்டும் கீரைத் தண்டும் சாப்பிடும் இந்தியர்கள் வெல்ல முடியுமா? என்பது அவர் கூறியது. இது ஒரு விளையாட்டாகக் கூறியதுதான். இதுபோல், இராமன் காய் கனி தின்பவன்தானே என்று எளிமையாகக் கருதப்பட்டான் போலும்.

தேவர்களையும் அரக்கர்களையும் நோக்க மக்கள் பிறவியினர் சிறுமை உடையவர்களாகக் கருதப்படுகின்றனர் என்னும் குறிப்பு தோன்ற ‘மானுடச்சிறு தன்மை’ எனப்பட்டது.

வேள்விக் குழி

இராமன் பெருஞ் சினத்துடன் வில்லேந்திக் கடல்மேல் அம்புகளைத் தொடுத்தான்; கடல் வேள்விக்குழியாக (யாக குண்டமாகத்) தோன்றிற்று. கடல் பள்ளம் - வேள்விக்குழி. மீன், பாம்பு, மலை முதலியவை விறகு.

கடல்நீர் நெய். இராமன் அம்பு நெருப்பு:

"மீனும் நாகமும் விண்தொடு மலைகளும் விறகா
ஏனை நிற்பன யாவையும் மேல்எரி எய்தப்
பேண நீர் நெடுநெய்யெனப் பெய்கணை நெருப்பாக் கூனை அங்கியின் குண்டம் ஒத்தது கடல்குட்டம்”
(18)

பேனம்=நுரை. கணை= அம்பு. குட்டம்=குழி, பள்ளம்.

இராமன் விடும் அம்புகளால் கடல்நீர் கொதித்து நுரை தள்ளுவதுபோல் இருக்கிறதாம். கடல் நீர் மிகுதியாதலின் 'நெடுநெய்' எனப்பட்டது. அம்பின் விசையால் தீ தோன்றிற்று, கடலில் உள்ள மீன், பாம்பு, மலை முதலியன எரிதலால் அவை விறகு எனப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/146&oldid=1204211" இலிருந்து மீள்விக்கப்பட்டது