பக்கம்:தமிழ் அங்காடி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  145


'ஏனை நிற்பன யாவையும்' என்பது, எரியின் மேலே போய்ப்படும் பொருள்களைக் குறிக்கும்.

கம்பரின் இத்தகைய உருவகம் பொருத்தமாய்ச் சுவை பயக்கிறது. பாடல் முழுதும் உருவகம் செய்யப் பட்டிருத்தலின் இது முற்றுருவகம் ஆகும்.

திமிங்கில கிலம்

இராமனின் அம்புகளால் பலவும் துண்டமாய்ச் சிதறின. திமிங்கிலங்களும் திமிங்கில கிலங்களும் சிதறிப் பலப்பல துண்டங்களாகின:

"துமிந்த துண்டமும் பலபடத் துரந்தன தொடர்ந்து
திமிங்கிலங்களும் திமிங்கில கிலங்களும் சிதறி" (23)

கடல்வாழ் உயிர்களுள் திமிங்கிலத்தைப் பெரிது எனச் சொல்வர். திமிங்கிலத்தை விடத் திமிங்கில கிலம் பெரியதாம். இது தொடர்பாகச் சேந்தன் திவாகரம் - விலங்கின் பெயர்த் தொகுதி என்னும் தலைப்பில் உள்ளதைக் காண்போம்:

'மெலியவரை வலியவர் வாட்டினால் வலியவரைத் தெய்வம் வாட்டும்’ என்னும் பழமொழிக்கு ஏற்ப சிறுமீனைப் பெருமீன் விழுங்கினால் பெருமீனைத் திமிங்கிலம் விழுங்கும் என்று மக்கள் கூறுவதுண்டு. சிறுமீனை விழுங்கும் அந்தப் பெருமீனுக்கு 'யானை மீன்’ என்று பெயராம், யானை மீனை விழுங்கும் மீனுக்குத் 'திமிங்கிலம்’ என்று பெயராம். திமிங்கிலத்தை விழுங்கும் மீனுக்குத் ‘திமிங்கிலகிலம்’ என்று பெயராம். இந்த விவரங்களை,

‘யானைமீன், திமி, பெருமீன் ஆகும்’
‘யானை விழுங்கு மீன் திமிங்கிலம் என்ப'
‘அம்மீனை விழுங்கும் மீன் திமிங்கில கிலமே,'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/147&oldid=1204213" இலிருந்து மீள்விக்கப்பட்டது