பக்கம்:தமிழ் அங்காடி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146  தமிழ் அங்காடி


என்னும் நூற்பாக்கள் அறிவிக்கும். பிறரை ஏய்த்துப் பிழைப்பவனைத் திமிங்கிலம் என்று சுட்டித் திட்டுவது உலக வழக்கம். இன்னும் பெரிய அளவில் ஊரை அடித்து உலையில் போடுபவனைத் 'திமிங்கில கிலம்’ என்று சொல்ல வேண்டும் எனத் திவாகரம் நமக்குக் கற்றுத் தருவதுபோல் தோன்றுகிறதல்லவா? ஆனால் மக்கள் இந்த திமிங்கில கிலத்தைக் கூடப் பேச்சு வழக்கில் குறிப்பிடுவதுபோல் தெரிகிறது. 'ஐயோ அவனா - அவன் பெரிய திமிங்கில மாயிற்றே' என்று கூறுகின்றார்களே - இங்கே பெரிய திமிங்கிலம் என்பது திமிங்கிலகிலத்தைத்தானோ? இருக்கலாம்!

பொய்ச் சான்று

பொய்ச் சான்று கூறியவனின் குடும்பம் அழிவது போல் இராமனின் அம்புகள் தைத்த மீன்கள் எல்லாம் அழிந்தனவாம். நிற்கும் உயர வாட்டத்தில் தம்மேல் தைத்த பெரிய மீன்கள், கூம்புடன் கூடிய மரக்கலம் ஒடுவது போல் ஓடினவாம்:

“மொய்த்த மீன்குலம் முதலற முருங்கின, மொழியின் :பொய்த்த சான்றவன் குலமெனப் பொருகணை எரிய :உய்த்த கூம்புடை நெடுங்கலம் ஓடுவ கடுப்பத்
தய்த்த அம்பொடும் திரிந்தன தாலமீன் சாலம்" (25)

முருங்குதல் = அழிதல். கூம்பு = பாய் மரம். சாலம் = வரிசை. தாலம் = பனை. தால மீன் = பனை மீன். பனைமீன் என்னும் பெயருடைய மீன்கள் ஒருவகை. இதனை,

"பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின்"
(375 ஆம் அடி)

என்னும் மதுரைக் காஞ்சிப் பகுதியால் அறியலாம். ‘தைத்த’ என்பது, மொய்த்த - பொய்த்த - உய்த்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/148&oldid=1204214" இலிருந்து மீள்விக்கப்பட்டது