பக்கம்:தமிழ் அங்காடி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148  தமிழ் அங்காடி


ஒன்றாகும். கம்பர் கூறியுள்ள 'முருங்கின' என்னும் சொல் நமது கருத்துக்கு மிகவும் அரண் செய்கிறது.

அடுத்துப் பொய்ச்சான்றுக்கு வருவோம்: பொய்ச் சான்று சொன்னவர் குலம் அழிவது போல் மீன்கள் அழியுமாம். பொய்ச் சான்று சொல்பவர் நிழலுக்காகத் தங்கும் மரமும் வாடிவிடும் எனக் கலித்தொகை என்னும் நூல் கூறுகிறது.

"கரி பொய்த்தான் கீழிருந்த
மரம்போலக் கவின்வாடி
எரி பொத்தி என்னெஞ்சம்
சுடுமாயின் எவன்செய்கோ" (34.10)

என்பது பாடல் பகுதி. கரி = பொய்ச் சான்று. ஒளவையாரின் நல்வழி என்றும் நூலிலும் இது கூறப்பட்டுள்ளது.

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலிவந்து படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்று ஒரம் சொன்னார் மனை" (21)

என்பது பாடல். வேதாளம் = பேய். சேடன் = பாம்பு. மன்று = நீதிமன்றம் ஓரம் = பொய்யான ஓரவஞ்சனை. இவனது குடிகெட்டுப் போகும் ஆதலால், கெட்ட குடியில் முளைக்கும் எருக்கம் பூவுக்குக் 'குடிகேடன்’ என்னும் பெயர் சித்தர்கள் சூட்டியுள்ளனர். எருக்குக்குக் - குடிகேடன் என்னும் பெயர் சாம்பசிவம் பிள்ளை அகர முதலியில் உள்ளது.

மற்றும், சிலப்பதிகாரத்திலும் பொய்ச் சான்று பற்றி உள்ளது. பொய்ச்சான்று சொல்பவரைப் பூதம் புடைத்து உண்ணுமாம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/150&oldid=1204217" இலிருந்து மீள்விக்கப்பட்டது