பக்கம்:தமிழ் அங்காடி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  151


என்பதிலுள் ‘ம’ என்னும் மெலி 'ப்' என்னும் வலியாகி அப்பு என வருவதுண்டு. கரும்பு வில் என்பது கருப்பு வில் எனவும், இரும்புப் பாதை என்பது இருப்புப் பாதை எனவும் வருவது போன்றது இந்த அப்பு என்பது. ஆக, அப்புகள் (அம்புகள்) நிறைந்திருப்பதால் அப்பு வேலை எனப்பட்டது.

இங்கே மற்றொரு பொருளும் உண்டு. அம்பு என்னும் சொல் வடமொழியிலும் உண்டு. அங்கே அம்பு என்பதற்குத் தண்ணீர் என்பது பொருள். தாமரைக்கு அம்புஜம் என்று ஒரு பெயர் உண்டு. அம்பு = தண்ணீரில், ஜ = தோன்றுவது என்பது பொருள். உப்பு வேலை அம்பு வேலையாயிற்று என்றால், நல்லதண்ணீர் உள்ள வேலையாயிற்று என்பதாகும்.

எனவே இராமன் அம்புகள் விட்டதால் உப்பு வேலை அப்பு (அம்பு) வேலையாயிற்று - நன்மையே உண்டாயிற்று எனக் கருத்து கொள்ளல் வேண்டும்.

‘குறைந்ததோ அளக்கர்’ என்பதற்குக் கடல் குறைவான பெயர் எடுக்கவில்லை என்பது கருத்து.

இதன் அடிப்படையில், 'மேலவர் சீறினும் சிறப்பு ஆதல்' என்ற ஒரு பொருளைப் பெறச் செய்ததால், இப் பாடலில் வேற்றுப் பொருள் வைப்பணி அமைந்துள்ளது.

கம்பர் மாபெரும் பாவேந்தர் (கவிச்சக்கரவர்த்தி) என்பதற்கு இந்த ஒரு பாடல் போதுமே!

அகப்பை

இராமன் அம்புகளால் நீர் வற்றிப்போன கடலின் அடியில் மணிகள் (இரத்தினங்கள்) தெரிகின்ற தோற்றம், கடலை ஒரு மணிப்பேழையாக (பெட்டியாக) எண்ணச் செய்ததாம். சங்குகளின் துளையில் அம்புகள் செருகியுள்ள தோற்றம் அகப்பைகள்போல் இருந்தனவாம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/153&oldid=1204221" இலிருந்து மீள்விக்கப்பட்டது