பக்கம்:தமிழ் அங்காடி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  153


பகழி = அம்பு, உவரி - கடல். புலவர் = அறிஞராம் பெரியோர்.

பெரியோர் சீறினால் மிகுமே தவிரக் குறையாது என்னும் கற்பனையான கருத்து மிகவும் சுவைக்கத்தக்கது. ஒரு குன்றும் ஒரு முத்தும் பலப் பல பகுதிகளாகச் சிதறினவாம். குண்றையும் முத்தையும் கொண்டு, புலவர் சீறினால் குறைவதில்லை என்று மேலும் வேறு ஒரு கருத்தைப் பெறவைத்த இந்த அமைப்பு 'வேற்றுப் பொருள்வைப்பு அணி' ஆகும்

கூறைப் புடவை

நீல நிலக் கடலைச் சுற்றி இராமனின் அம்புகள் கவ்விக் கொண்டிருப்பதால், நிலமகள் (பூமாதேவி), நீலப்புடவையை மாற்றிப் பூவேலை பொருந்திய கூறை உடுத்தியிருப்பது போல் தோன்றினாளாம்

"காலவான் கடுங்கணை சுற்றும் கவ்வலால்
நீலவான் துகிலினை நீக்கிப் பூநிறக்
கோலவான் தனிநெடுங் கூறை சுற்றினாள்
போல மாநிலமகள் பொலிந்து தோன்றினாள்" (55)

காலன் = எமன். எமன் போன்ற கணையாம். துகில், கூறை = உடை, கோலம் = அழகு. தனி = தனித்த, ஒப்பற்ற.

நிலத்தைப் (பூமியைப்) பூமாதேவி, நிலமடந்தை, நிலமகள் என்றெல்லாம் பெண்ணாகக் கூறுவது மரபு. திருவள்ளுவர் 'நிலம் என்னும் நல்லாள்' என்று கூறினார். நிலத்தைப் பெண்ணாகக் கூறியதில் உள்ள பொருத்தமாவது: பெண்ணிடத்திலிருந்துதான் பிள்ளைகள் பிறக்கின்றனர்; அதுபோல் நிலத்திலிருந்துதான் எல்லாம் விளைகின்றன. நிலம் தன்னிடம் பல வளமும் உடைத் தாயிருப்பதால்தான், யாங்கள் ஒன்றும் இல்லாத ஏழைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/155&oldid=1204226" இலிருந்து மீள்விக்கப்பட்டது