பக்கம்:தமிழ் அங்காடி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  155


வருணன் அடைக்கலம்

எத்தனை அம்புகள் விட்டும் வருணன் வராததால், இராமன் மிகவும் சினந்து நான்முகன் கணையை விட்டான். கடல் மிகவும் கொதித்ததனால் வருணன் அஞ்சி இராமனிடம் வந்து பணிந்து போற்றி, குற்றம் பொறுக்குமாறு வேண்டி அடைக்கலம் அளிக்கும்படிக் கெஞ்சிக்கேட்டான்.

பின்னர் இராமன், தீ மிகுதியால் பொங்கும் பால் சிறிது நீர் விட்டதும் அடங்குவது போல் சினம் அடங்கி அடைக்கலம் அளித்தான்.

‘அருப்புறப் பிறந்த கோபம் ஆறினான் ஆறா ஆற்றல்
நெருப்புறப் பொங்கும் வெம்பால் நீர் உற்றது

அனைய நீரான் (74)

அருப்பு =திட்பம், உவமை அடுப்பங்கரைப் பெண்கள் அறிந்த பேருண்மை, வெற்றுப் பாலில் நீர் கலப்பதுதான் குற்றம்; கொதிக்கும் பாலில் சிறிது நீர் கலக்கலாம். இங்கே,

“அடுங்காலை, நீர் கொண்ட வெப்பம்போல் தானே

தணியுமே

சீர்கொண்ட சான்றோர் சினம்” (125)

என்னும் நாலடியார்ப் பாடல் ஒப்பு நோக்கத்தக்கது, சீர் கொண்ட சான்றோர் சினம்' என்பது, சினம் கொண்ட இராமன் சீர்கொண்ட சான்றோன் என்பதை அறிவிக்கும். பின்னர் இராமன் வருணனை நோக்கிக் கடலில் வழி ஏற்படுமாறு செய் என்றான். அதற்கு வருணன் கூறிய தாவது:- வழி உண்டாக்க வேண்டுமெனின் கடல் நீரை வற்றச் செய்யவேண்டும், அதற்குப் பல காலம் பிடிக்கும். அதுவரையும் படைகள் காத்திருப்பது அரிது. அல்லது, கடல் நீர் முழுவதையும் கல்லாக இறுகச் செய்யலாம் எனின், கடலிலுள்ள நூறாயிரக்கணக்கான உயிர்கள் யாவும் நசுங்கி மடிந்து போகும். அதனால், கடல்மேல் அதாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/157&oldid=1204230" இலிருந்து மீள்விக்கப்பட்டது