பக்கம்:தமிழ் அங்காடி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156  தமிழ் அங்காடி


என் தலைமேலே கற்களைப் போட்டு அணை கட்டினால், எவ்வளவு காலம் ஆனாலும் நான் தாங்கிக் கொண்டிருப்பேன்; எனவே, அணை கட்டுவதற்கு ஏற்பாடு செய்க என வருணன் கூறினான்.

"கல்லென வலித்துநிற்பின் கணக்கிலா
உயிர்கள் எல்லாம்
ஒல்லையின் உலந்துவீயும் இட்டதொன்று
ஒழுகா வணணம்
எல்லையில் கால மெல்லாம் ஏந்துவன்
எளிதின் எந்தாய்!
செல்லுதி சேது என்று ஒன்று இயற்றி
என் சிரத்தின் என்றான்” (84)

புளுகினாலும் பொருந்தப் புளுகவேண்டும் என்பர். அது போல், வழி சொன்னாலும் பொருந்த வழி சொல்ல வேண்டும். கடல் நீரை வற்றச் செய்வதால் காலம் மிகப் பிடிக்கும். கடல் நீரைக் கல்லாக்குவதென்றால், உள்ள உயிர்கள் யாவும் அழிந்தொழியும். ஆதலின் அணை கட்டுக என்று திறமையுடன் வருணன் வழி வகுத்துக் கொடுத்துள்ளான். இராமர் மறுக்க முடியாத வழி இது.

சிலபோது ஆற்றில் அணை கட்டுகிறார்கள் - அது அடுத்த வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய் விடுகிறது. அதுபோன்றின்றி, ஒன்றும் வீணாகாத வண்ணம் எந்திக் காண்பேன் என்ற சொன்னதான கருத்தை, 'இட்டது ஒன்றும் ஒழுகாவண்ணம் ஏந்துவன்’ என்பது அறிவிக்கிறது.

இறுதியாக, சேது-அணை கட்டும்படியாக இராமன் படைமறவர்கட்கு ஆணையிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/158&oldid=1204231" இலிருந்து மீள்விக்கப்பட்டது