பக்கம்:தமிழ் அங்காடி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  157


கவிதைப் பகுதி


12. தலையாய தமிழுக்கு நிலையான மகுடங்கள்

(தலைவன் தலைவி உரையாடல்)


நேரிசை ஆசிரியப்பா


பொங்கலோ பொங்கல் பொங்கும் நாளாம்
தங்குதைத் திங்கள் தண்ணிய முதல்நாள்
இனித்திடும் பொங்கல் இன்பமாய் அருந்தி
அணித்தே தலைவனும் தலைவியும் அமர்ந்தே
நனியுரை யாடினர் நகைத்து மகிழ்ந்தே
தான்செய் தளித்த தரமிகு பொங்கலின்
தேன்சுவை நலத்தைத் தெரிவித் திடுகெனத்
தலைவி மகிழ்வொடு தலைவனை வினவினள்
பொங்கலின் இனிமையைப் புகழ்ந்தபின் தலைவன்
*பொங்கலின் இனிய பொருள் ஒன்றுண்டு
திங்களொடு தோன்றிய தீந்தமிழ் மொழியது;
இங்குள தமிழரை ஈன்ற தாய் அது
தண்டமிழ்ந் தாயவள் ஒண்டவந் தோர்களால்
மண்டுதன் வளங்கள் மறைய இழந்தாள்
அன்னை தமிழ்க்கு அரும்பெரு மகுடம்
பன்னற் கரியவாய் பற்பல உண்டு
எண்ணரு மகுடம் எழில்பெறச் சூட்டி
அன்னையை அரியணை அமர்த்த வேண்டுமால்.
தலைவி வினவல்:
அன்னையை அரியணை அமர்த்த வேண்டின்,
அன்னையின் தகுதிகள் அறிவிப் பீரென,
தலைவன் கூறல்:

_____________________________________________________________________________

  • பொங்கலின் = பொங்கலைக் காட்டிலும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/159&oldid=1210502" இலிருந்து மீள்விக்கப்பட்டது