பக்கம்:தமிழ் அங்காடி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14 தமிழ் அங்காடி


அமைத்தார். சுடர் கம்பி வலையில் பட்டுச் சுற்றிலும் சிதறி விடுவதால் விளக்கு மேதேன் எரி வாயுவை எரியச் செய்ய முடிவதில்லை.

இதனால் சுரங்கத்திற்குள் வெடித் தொல்லையின்றித் தொழிலாளர்கள் காப்பாற்றப்பட்டனர். இவ்வாறு பாதுகாப்பு தருவதால் இதற்கு ‘டேவி காப்பு விளக்கு’ என்னும் பெயர் வழங்கப் பட்டது.

காப்பு விளக்கு அமைத்த டேவி, இதன் உரிமைக்காகக் காப்புரிமைப் பணம் வாங்கவில்லை - மறுத்து விட்டார். எனவே, இவருக்குக் காப்புரிமைத் தொகைக்கு ஈடாகப் பெரிய வெள்ளிக் கட்டி பரிசாக அளிக்கப் பெற்றது. இந்த வருவாயைத் தம் சொந்த நலத்திற்காக டேவி பயன்படுத்தவில்லை. தம் பெயரால் ‘டேவி அறக்கட்டளை’ என்னும் ஓர் அறக்கட்டளை ஏற்படுத்தினார். அதைக் கொண்டு, வேதியியல் கண்டுபிடிப்பாளர்கட்கு ‘டேவி பதக்கம்’ என்னும் விருதுப் பதக்கம் வழங்க ஏற்பாடு செய்தார்.

1818 ஆம் ஆண்டு 'இளம் கோமகன்’ என்னும் சிறப்புப் பதவி அளிக்கப் பெற்றார். பின்னர் இலண்டன் ராயல் கழகத்தின் தலைவர் பதவி தேடி வந்தது. மேலும், வாயுக்களை ஆராயும் ஒரு நிறுவனத்தின் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப் பட்டது.

1790 ஆம் ஆண்டு நைட்ரஸ் ஆக்சைடு என்னும் மயக்க மருந்தைக் கண்டு பிடித்தார்.

ராயல் கலைக்கழகத்தில் (Royal Institution) வேதியியல் பேராசிரியர் பதவியும் டேவியைத் தேடி வந்தது.

உலகின் தலைசிறந்த அறிவியல் மேதையாகிய டேவி, 1826 ஆம் ஆண்டு தமது ஐம்பதாம் அகவையில் இறுதி எய்தினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/16&oldid=1203019" இலிருந்து மீள்விக்கப்பட்டது