பக்கம்:தமிழ் அங்காடி.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 159

அன்னைக் குரிய அரும்பெரு மகுடம் என்னென் னவென இயம்பிடு கென்றாள். தலைவன் கூறல்: அன்னையின் அருமை பெருமை அனைத்தும் மன்னிய மகுடமாம் மகிழ்வுடன் கேள் நீ; கடல்கொள் குமரிக் கண்டமே மக்கள் முதலில் முகிழ்த்த இடமென்ப தாய்வுரை. ஞாயிற்றின் பிரிந்த நமதுபூ வுலகில் முதலில் குளிர்ந்தது முத்தமிழ்க் குமரியே! ‘நெருப்புக் குளிர்ந்து நெடும்பாறை யானது; பாறை தேய்ந்து பலமணல் உதிர்த்தது’ என்ப திந்த நூற் றாண்டின் ஆய்வுரை. பாறைக் காலத்தே பைந்தமிழ் மக்கள் வீறுடன் தோன்றிய வியத்தகு செய்தியை கி.பி. எட்டாம் நூற்றாண் டிலேயே ஐயனா ரிதனார் எனுந்தமி ழறிஞர் ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி என மொழிந்தார். முதலில் தோன்றிய மூத்த தமிழரின் மொழியே உலகின் மூத்த முதல்மொழி, குமரிநா கரிகம் கொடுங்கடல் கொண்டது. அதாஅன்று, மண்ணுக் குள்ளே மறைந்த தொன்மைச் சிந்துநா கரிகமும் செந்தமிழ் இனத்தவர் சிந்துநா கரிகச் செல்வமே யன்றோ? அதாஅன்று, ஒருசொல் பல்பொருள் உணர்த்தலும் தமிழின் பொருவில் தொன்மையைப் புலனாக் கும்மே! மாமன் எனுமுறை மகவிடங் கூறின் மாமனென் றழைக்கும் மற்றை யோரையும். ஆமொரு பெயரை அற்றைத் தமிழர்