பக்கம்:தமிழ் அங்காடி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  161


நன்கு 'தமிழ்'என நவிலலாம் தவறிலை.
அணியும் பொன்னும் அணிந்த இயைபென
இனிமையும் தமிழும் இணைந்துள மாதோ!
இனிமையும் மென்மையும் என்றும் மகுடமால்!

தாய்மைக் கன்னிமை

தனித்தியங் குஞ்சீர் தமிழினுக் குண்டு
இனித்திடக் கன்னலில் யாதிட வேண்டும்!
தாய்மொழி தனக்கிலை தான்பன் மொழிக்குத்
தாய்மொழி யாகியும் தானழி வுறாத
'தாய்மைக் கன்னிமை' தண்டமிழ்க் குண்டால்!
ஆய்வுறின் இணையிதற் காதி முதல்வனே!
அழியாக் கன்னிமை அருந்தமிழ் மகுடமே!

தமிழ்த் தெய்வம்

பணியுங் கோயிலாப் பள்ளி தனைச்செய
எணினார் பாரதி (20) இந்நூற் றாண்டில்.
அரசி யாந்தமிழ் அன்னை தெய்வமா,
அரண்மனை யனைத்தும் அருந்தமிழ்க் கோயிலா,
அரசியல் வினையெலாம் ஆர்வழி பாடா,
அரசியற் சிறப்பெலாம் அருமைசால் விழவா,
அரசுள குடியெலாம் அன்புறு அடியரா,
அரசமர் புலவோர் அருட்குர வோரா,
அரசர் அறநிலைத் தலைவராத் தமிழுக்(கு)
அமைத்தே மகுடம் ஆண்டனர் அந்நாள்.

தமிழ்ப் பெருமை

இந்தியா முழுமையும் இமய வரம்பன்
செந்தமிழ் கொண்டே சிறக்க ஆண்டான்
என்பதை யவன்பேர் இயம்பு மன்றோ?
அரசர் அழியினும் அருந்தமிழ்ப் புலவோர்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/163&oldid=1204251" இலிருந்து மீள்விக்கப்பட்டது