பக்கம்:தமிழ் அங்காடி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  163


இப்பொழு திலாமை யிதற்குறு கரியால்!
தொன்மையும் முதன்மையும் தொல்பெரு மைகளும்
இன்னொலி நயமும் எழுத்து சொல் வளமும்
என்றும் அழியா இன்னுயிர் மகுடமாம்!
இன்னுங் கேள்!
பரத கண்டம் எனும்இந் தியாவை
முதலில் இணைத்தவள் முத்தமிழ் மதுரையில்
அமர்ந்தர சாண்ட அங்கயற் கண்ணியே!
வடவிம யம்வரை வண்டமிழ்க் கயல் விழி
படையெடுத்து வென்றது பழவர லாறு
முழுதுல கத்தின் முதல்பெண் ணரசியும்
தொழுதகை கயற்கண் தொல்புக ழோளே!
குமரி முதலா இமயம் வரையும்
தமிழால் மதுரையில் தடாதகை ஆண்டதும்
தலைமைத் தமிழ்க்கு நிலைத்த மகுடமால்
தலைவி வினவல்: சரி சரி,
எழுத்து வளமும் இனிய சொல் வளமும்
வழுத்துநூல் வளமும் வகைபெறச் சொன்மின்!
தலைவன் கூறல், ஓ, இதோ!

எழுத்து வளம்

பயிறரும் ஆங்கிலப் பாராள் மொழியில்
உயிருள மெய்யுள உயிர்மெய் ஆங்கில
மூன்றும் தமிழில் முற்ற உளவே!
உயிர்குறை வாலவ் வுலக மொழியில்
குறில்நெடில் தனித்தனி குறிப்பது தொல்லை.
‘வடமலை என்பதை வாடா மாலை -
‘வாடா மாலை"யை வடமலை’ என்ப.
ஆங்கிலக் குறைவின் அழகு புரிந்ததோ?
தமிழெழுத்து வளத்தின் தகுதி தெரிந்ததோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/165&oldid=1210506" இலிருந்து மீள்விக்கப்பட்டது