பக்கம்:தமிழ் அங்காடி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  165


‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்னும் புறம்முதற் சங்க இலக்கியம்.
மின்னும் ஐம்பெருங் காப்பியம், மேதகு
கம்பன் காவியம், தொண்டர் புராணம்,
பாடல் பெற்ற பழம்பெரும் பதியெனும்
ஈடில் புகழை எளியசீ றூர்க்குத்
தேடித் தந்த திருமுறைப் படைப்புகள்,
ஆழ்வார் அருளிச் செயல்கள் இன்னன
தலையாம் தமிழ்க்கு நிலையாம் மகுடமாம்.
அதாஅன்று,
தமிழுணர் விலாத 'கும்பகர்ணத்' தமிழனைத்
தமிழா எழுவெனத் தட்டி எழுப்பும்
பாரதி, பாரதி தாசன் படைப்புகள்,
இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பல்வகை
மறுமலர்ச்சி நூல்கள் மன்னிய மகுடமே!
அதாஅன்று,
ஆயிரம் ஆயிரம் ஆண்டுக ளாக
ஆயிரம் ஆயிரம் அறிஞர் அமர்ந்தே
ஆய்வு நடத்திய அருந்தமிழ்க் கழகம்
மேவி யிருந்த மேன்மை மதுரையும்,
தமிழின் சிறப்பைத் தரையுளார்க் குணர்த்தித்
தமிழாய் உலகத் தமிழ்மா நாடும்
தலையாம் தமிழ்க்கு நிலையாம் மகுடமால்!
தலைவி வினவல்! அப்படியா!
ஆங்கிலம் இற்றைநாள் அடைந்துள வளமெலாம்
ஈங்குநம் தமிழில் உளவோ இயம்புமின்!
தலைவன் கூறல்: அதுவா?
தமிழ்மொழி அடக்கித் தாழ்த்தப் பட்டதால்
தமிழ்க்கலை பலவும் தங்கா தொழிந்தன.
ஒழிந்தன, உள்ளன, யாவும் புதுக்கியும்

புதிய கலைபல பொதித்தும் தமிழ்க்குப்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/167&oldid=1209002" இலிருந்து மீள்விக்கப்பட்டது