பக்கம்:தமிழ் அங்காடி.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


172 தமிழ் அங்காடி

சிலநாள் கழித்து ஒரு நாள், தெருக்கோடியிலுள்ள பத்திரிகைக் கடைக்குச் சென்ற நான், அங்கே கமலநாதன் உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருக்கக் கண்டேன். அந்த நேரத்தில் இரண்டு ‘சீவன்கள் கமலநாதனை நெருங்கிக்கொண்டிருந்தன. ஆம், அதே கிழவனும் பையனும்தான்.

ஒன்றும் கொடுப்பதற் கில்லை என்று முந்தி வறிதே அனுப்பி விட்டாரே, இங்கேவேறு வந்து அவருக்குத் தொல்லை கொடுப்பானேன்? இப்போதும் அவர் ஒன்றும் கொடுக்காமற்போனால், கிழவன் அவரை வெறுப்பான். அதனால், அவர் முன்பு செய்திருக்கிற உதவிகள் அத்தனையும் மறக்கடிக்கப்படும். எப்போதுமே, வாங்குபவர் களுக்குப் பலநாள் கொடுத்தது நினைவிருக்காது; ஒருநாள் கொடுக்காததுதான் நெஞ்சை உறுத்தும். இந்தக் கிழவன் எதற்காகக் கமலநாதனைக் கடைசி எல்லைவரையும் சோதித்துப் பார்த்து அவருடைய பெயரைக் கெடுக்க வேண்டும்? - என்று நான் கமலநாதன்மேல் பரிவு கொண்டேன்.

ஆனால் என் பரிவுக்கு அங்கே இடம் ஏற்படவில்லை. கிழவனையும் பையனையும் கண்டதுமே கமலநாதன் காசு எடுத்துக் கொடுத்து விட்டார். முந்தி கடிந்து பேசி விட்டதாலும், நடுவில் சில நாட்கள் ஒன்றும் கொடுக்காத தாலும், அவர் மனமிரங்கி இப்போது கொடுத்திருக்கிறார் என்று எண்ணிக்கொண்டேன் நான்.

இப்படியாக மேலும் சில நாட்கள் அதே பத்திரிகைக் கடையில் கிழவனும் பையனும் வந்து கமலநாதனிடம் காசு வாங்கிச் சென்றதைக் கண்டு வியந்தேன். மாலை வேளையில் பொழுது போக்கிற்காக அந்தப் பத்திரிகைக் கடைக் காரரிடம் கமலநாதன் வந்து பேசிக்கொண்டிருப்பது