பக்கம்:தமிழ் அங்காடி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  175


சிறிது நேரத்திற் கெல்லாம் அவன் வழக்கம்போல் காணப் பட்டான்.

பையன்மேல் மோட்டார் சைக்கிளை ஏற்றிய கடமையுணர்ச்சி அற்ற காண்டாமிருகம் அவ்விடத்தினின்றும் மறைந்துவிட்டது. என்னால் கிழவனையும் பையனையும் விட்டுப்போக முடியவில்லை. பழகிய பாசம் இல்லா விட்டாலும், பலநாள் பார்த்த பாசம் என்னை உந்தியது. ஏதாவது காசு கொடுக்கவேண்டுமென்று எண்ணினேன். ஏனெனில், வழக்கம்போல் காசுதரும் கமலநாதன் இன்றைக்கு அலுவலகத்திற்கு விடுமுறை, போட்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.

வீட்டில் சிறுவன் சேகருக்கு இன்றைக்குப் பிறந்த நாள் விழா. வீடு ஒரே அமர்க்களமாயிருக்கிறது. வருவாரென்னபோவாரென்ன! பர்வதம் அம்மாளின் தாய் வீட்டிலிருந்து ஏகப்பட்ட கூட்டம் வந்திருக்கிறது. இந்தக் கோலாகலத்தில் கமலநாதன் அலுவலகம் வருவதெப்படி கிழவன் பணம் வாங்குவதெப்படி?

கிழவன் மேலும் பையன்மேலும் இரக்கம் கொண்ட நான், ஒரு ரூபாயை எடுத்து இதை வைத்துக் கொள்’ என்று கிழவனிடம் நீட்டினேன்.

நான் காசு நீட்டியதைக் கண்ட கிழவன் புற்றுப் பாம்புபோல் என்மேல் சீறினான். 'கண்டவர்களிடம் கை நீட்டிக் காசு வாங்க நான் என்ன பிச்சைக்காரனா? உன்னிடம் ஒன்றும் நான் உதவி கேட்கவில்லையே. உன்னிடம் காசு மிகுதியாயிருந்தால் கொண்டுபோய்க் கடலில் கொட்டையா’ என்று கடிந்து பேசினான்.

நடப்பது நனவா, கனவா? எனக்குத் தலை சுழன்றது. காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/177&oldid=1204287" இலிருந்து மீள்விக்கப்பட்டது