பக்கம்:தமிழ் அங்காடி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  177



“அப்படியென்றால் இந்தப் பையன்...?”

"என் பேரன்’’.

"மகள் வயிற்றுப் பேரனா"

"இல்லையில்லை. மகன் வயிற்றுப் பேரன்தான்".

"எந்த மகன் வயிற்றுப் பேரன்?"

"எந்த மகன் வயிற்றுப் பேரனா? எனக்கு இருப்பது ஒரே மகன்தான்".

“அப்படியென்றால் இந்தப் பையன் கமலநாதனுடைய மகன் என்று சொல்லுகிறாயா?”

"சொல்லுவதென்ன! அவன் மகனேதான் இவன்”. என்று கிழவன் சொல்லிக் கொண்டிருந்தபோது பையனுடைய கண்கள் உள்ளே சொருகுவதைக் கண்டோம். உடனே அவனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவேண்டுமென்று நான் சொன்னேன். பையனுக்கு ஒன்றும் நேர்ந்து விடாது; அவனுக்கு ஆயுள் நூறு என்று சோதிடத்தில் சொல்லியிருக்கிறது என்று கிழவன் சொன்னான். ஆயுளை நூறாக்கு வதற்காகத்தான் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அவனுக்கு உள் காயம் பட்டிருக்கிறது என்று நான் மீண்டும் தூண்டினேன். கிழவன் ஒத்துக்கொண்டான். உடனே அங்கிருந்த ஒரு குதிரை வண்டியைப் பேசிப் பையனையும் கிழவனையும் ஏற்றி நானும் ஏறிக்கொண்டேன். மீண்டும் பேச்சு தொடர்ந்தது:

"ஏன் தாத்தா! நீயும் இந்தப் பையனும் வீட்டோடு இருக்காமல் இப்படி வெளியில் சுற்றிக் கொண்டிருப் பானேன்??"

"அதுவா! அது ஒரு பெரிய கதை”.

“என்ன கதை? சொன்னால் கேட்கலாம்”,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/179&oldid=1204291" இலிருந்து மீள்விக்கப்பட்டது