பக்கம்:தமிழ் அங்காடி.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


178 தமிழ் அங்காடி

‘மல்லாந்து துப்பினால் மார்புமேலே என்பார்கள். அது போல, நானே அந்தக் கதையைச் சொல்லவா?”

‘உனக்கு விருப்பம் இருந்தால் சொல்லலாம்”,

‘சரி சொல்கிறேன். பிறரிடம் சொல்லி ஆற்றினால், மனத்திலுள்ள துன்பச் சுமை சிறிது குறையலாம். ஆனால் நீ யார்?”

“நான் வெளியூரிலிருந்து வேலைக்கு வந்திருக்கிறேன். உன் மகன் கமலநாதனது வீட்டிற்கு எதிர் வீட்டில் குடி யிருக்கிறேன்’’.

‘ஒகோ! அப்படியானால் என் மகன் குடும்பத்தைப் பற்றி உனக்கு நன்றாகத் தெரியும்.

‘ஏதோ சிறிதளவு தெரியும்’.

‘சரி, எதிர் வீட்டுக்காரரிடம் சொல்லலாம். எனக்குக் கமலநாதனும் மங்களம் என்ற பெண்ணும் ஆக இரண்டே குழந்தைகள்தான். மங்களம் திருமணப் பருவத்தை நெருங்கிக் கொண்டிருந்த சமயம் பார்த்து என் மனைவி என்னையும் குழந்தைகளையும் தவிக்கவிட்டுக் கண்ணை மூடிக் கொண்டாள்’.

“ஐயோ பாவம்! கண் கலங்காமல் சொல் தாத்தா”.

‘எனக்குப் போதுமான வசதி கிடையாது. ஒரு விதமாக மங்களத்தை ஒர் ஏழைக்குக் கட்டிக் கொடுத்தேன். எப்படியோ கமலநாதனைப் படிக்க வைத்து வேலையில் அமர்த்தினேன். மீனா என்னும் ஒர் அறிவுள்ள பெண்ணை அவனுக்கு மண முடித்து வைத்தேன். அவள் இந்தப் பையன் மணியனைப் பெற்று மூன்று வயதில் விட்டுவிட்டு மாமியார் போன இடம் போய்விட்டாள்'