பக்கம்:தமிழ் அங்காடி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186  தமிழ் அங்காடி


பேசினார். உடனே அங்கிருந்த ஊர் மக்கள் எங்களை உதைக்கத் தொடங்கினார்கள். சீர்திருத்த இளைஞர்கள் அவர்களை எதிர்த்தனர். இந்தப் போரில் யானும் சிவமும் அடிபடவில்லை. அவர்கட்குள் போர் நிகழ்ந்தது. யான் எனது சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொண்டு ஊர் மக்களை அமைதி செய்தேன். பின்னர்ச் செத்தோம் - பிழைத்தோம் என்ற அளவில் அவ்விடத்தைவிட்டு வெளியேறினோம். பக்கத்து ஊர் இளைஞர் ஒருவர் அவர் ஊருக்கு - அவர் வீட்டிற்கு எங்களை அழைத்துச் சென்று மதிய உணவு அளித்தார். இது நடந்தது 1949ஆம் ஆண்டு.

அங்கே சிறிது நேரம் ஒய்வு கொண்ட பின்பு, புதுவை வரும் பேருந்து வண்டியைப் பிடிப்பதற்காக மாட்டு வண்டியில் வளவனூருக்கு வந்தோம். அங்கே, வளவனூர் உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழ் ஆசிரியராயிருந்த திரு. சுந்தரமூர்த்தி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் என்னைப் பற்றித் தெரியும் என்றார். அவர் செலவில் சிற்றுண்டி நடந்தது.

நான் அந்த நாள் வரை ‘தமிழ் வித்துவான்’ பட்டம் ஒன்றுதான் பெற்றிருந்தேன்; S.S.L.C. கூடப் படிக்கவில்லை; புதுவைப் பெத்தி செமினர் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன். என்னிடம் சுந்தரமூர்த்தி கூறியது. ஆசிரியரா யிருப்பவர்கள் பிரைவேட்டாக S.S.L.C. எழுதுவத்ற்குத் தரப்பட்டுள்ள சலுகை 1950 மார்ச்சோடு முடிகிறது. எனவே, நீங்கள் புதுவை சென்று உடனே S.S.L.C. தேர்வுக்குப் பணம் கட்டி 1950 மார்ச்சில் தேர்வு எழுத முயலுங்கள் என்று ஊக்கப்படுத்தினார். அவ்வாறே, கடலூர் சென்று பணம் கட்டி, S.S.L.C. நூல்கள் வாங்கி வந்து, ஐந்து திங்கள் கால அளவில் எல்லாப் பாடங்கட்கும்யானே ஆசிரியனாய்க் கற்றுத் தேர்வில் வெற்றி பெற்றேன் அப்போது S.S.L.C. முடித்ததால் தான், பின்னர், இன்டர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/188&oldid=1204317" இலிருந்து மீள்விக்கப்பட்டது