பக்கம்:தமிழ் அங்காடி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  193


ஆனால், அறியாதவர்களும் அந்தப் பொருளில் அதைச் சொல்லுகிறார்கள். 'கொடுவாள் கத்தி' என்பதில் கொடு என்பது 'வளைந்த' (வாள்) என்னும் பொருளைத் தருகிறது. அந்தக் கத்தி வளைவாகத் தானே உள்ளது. மற்றும் ,கொடுக்காய்ப் புளிச்சுளை’ என்பதிலும் 'கொடு' என்பது 'வளைந்த' என்னும் பொருளிலேயே உள்ளது. அந்தக் காய்ச் சுளை வளைவாகத்தான் இருக்கும். அடுத்து, ‘பா’ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குப் 'பரப்பு' என்னும் பொருளும் உண்டு. பாஅடி யானை (புறம் - 233) என்பதற்குப் பரந்த காலடி உடைய யானை என்பது பொருளாகும். இந்தப் 'பா' என்பதைப் பரப்பு என்னும் பொருளில் தம்மை யறியாமலேயே மக்கள் பயன்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டு: பாவாடை - சுருக்கம் சுருக்கமாகத் தெரியும்படித் தைத்திருக்கும் பாவாடை கால்களை, எவ்வளவு அகற்றி வைப்பினும் பரந்து கொடுக்கும். அதனால் அதற்குப் பாவாடை என்னும் பெயர் வழங்கப்படுகின்றது. - என்பன, வ. சுப. மா. சொன்ன ஆராய்ச்சி விளக்கமாகும். இதைக் கேட்டு யான் மிகவும் மகிழ்ந்தேன்.

இந்தக் கருத்தை யான் பாடம் கற்பித்த போதும் சொற்பொழி வாற்றிய போதும் எடுத்துக் கூறியுள்ளேன்எனது நூல் ஒன்றிலும் எழுதியுள்ளேன்.

இந்தக் கருத்து பேருந்தில் சென்றபோது பேசியது. பேருந்து திருப்பாதிரிப் புலியூரை (கடலூர்-2) அடைந்தது. வ. சுப. மா. ஐயா அவர்களை யான் திருப்பாதிரிப்புலியூரில் கோயில் தெருவில் இருக்கும் ஞானியார் மடாலயத்திற்கு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தேன். அங்குள்ள சிறந்த நூலகத்தைப் பார்வையிடுவதில் ஐயா சிறிது நேரம் செலவழித்தார். பின்னர்ப் பாடலேசுரர் திருக்கோயிலுக்கும் அழைத்துச் சென்றேன். 'தேயமெல்லாம் நின்றிறைஞ்சும் திருப்பாதிரிப் புலியூர்' என அப்பரடிகள் பாடியுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/195&oldid=1204336" இலிருந்து மீள்விக்கப்பட்டது