பக்கம்:தமிழ் அங்காடி.pdf/198

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


196 தமிழ் அங்காடி

வைத்து மறுநாள் காலை திறந்து பார்த்தால், இருவருள் ஒருவர் அடிபட்டுச் செத்துக்கிடப்பார் - என்று கூறினார். அதைக் கேட்டதும், பார்வையாளர்கள் கை தட்டி நகைத்தார்கள். அவரைத் தொடர்ந்து அடுத்துப் பேசவந்த ஒருவர் முன்னவரினும் ஒரு படி மேலே போய்விட்டார். இரண்டாமவர் கூறியதாவது:- இருவருள் ஒருவர் செத்துக் கிடப்பார் என்று முன்பு பேசியவர் கூறினார் - ஒருவர் மட்டுமல்லர் - இருவருமே செத்துக்கிடப்பார்கள் - அந்த அளவுக்கு வாதம் புரிந்து அடிதடியில் இறங்கியிருப்பார்கள்என்று தெரிவித்தார். உடனே அவையினர் நெடுநேரம் கைதட்டிச் சிரிப்பாய்ச் சிரித்தார்கள்.

இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, மாணிக்கம் ஐயா இடையில் எழுந்து போய் ஒலி பெருக்கிக் கருவியைப் பிடித்துக் கொண்டு, நீங்கள் எங்களை அழைத்துப் பெருமை படுத்தியது போதும் - இனிமேல் எங்கும் என்றும் இதுபோல் பேசாதீர்கள் - என்று முழங்கி விட்டு வந்து அமர்ந்தார். அதன் பிறகு அவையின் நடை முறையே மாறி நல்ல நிலையை எய்தியது,

எல்லாத் தொழிலாளர்களுமே - எல்லாத்துறையினருமே ஒருவர்க்கொருவர் மாறுபடுவது உலக இயற்கை. மற்றவர்கள் அறையில் ஆடுகிறார்கள் - தமிழ்ப் புலவர்கள் அம்பலத்தில் ஆடுவதால் வெளியில் தெரிகிறது. இவ்வாறு தமிழ்ப் புலவர்களைக் குறைவு படுத்துவது தமிழைக் குறைவு படுத்துவதாகவே பொருள்படும். இதனைப் பொறுக்க முடியாத மாணிக்கம்ஐயாவின் தமிழ்ப் பற்றும் கடமை உணர்வும் துணிவும் பெரிதும் பாராட்டத் தக்கனவாம்.

நூல்கள்

ஐயா பல ஆய்வு நூல்கள் எழுதியுள்ளார்கள். தொல்காப்பியப் புலமைத்திறன் பற்றிச் சொல்லவேண்டிய