பக்கம்:தமிழ் அங்காடி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  203


ஆலை யரக்கன்

இப்போது ஆலை யென்னும் அரக்கன், சுருங்கிய நேரத்தில் மிகுந்த துணிகளை விரைந்து தயாரிக்கிறான். இதனால் கைத்தொழில் அமரர்கள் கதிகலங்குகின்றார்கள் அவ்வரக்கன் எதிரில். இனி எல்லாக் கைத்தொழில்களும் இப்படித்தான் ஆய்விடும். இத்தகைய ஆலைகள் இருப்பினும் கைத்தறிகளும் இருக்க வேண்டும் என்பதற்குச் சில காரணங்கள் சொல்ல முடியும்.

கைத்தொழிற்காரணங்கள்

1. நம்நாட்டிலும் பிறநாடுகளிலும் பல ஆலைகள் இருந்து கொண்டு துணியுற்பத்தி செய்து உலகத்திற்கு வழங்கிவரும் போதுங்கூட, ஆண்டுதோறும் கோடிக் கணக்கான கைத்தறிகள் இருந்து கொண்டு உற்பத்தி செய்து, உள்நாட்டிற்கும் வெளிநாட்டிற்கும் வழங்கி வருவதையும், ஆ யி ரக் க ண க் கா ன கைத்தறித் துணிவணிகர்கள் சில்லாண்டுகளில் நூறாயிரக் கணக்கில் நிதிதிரட்டிவிடுவதையும் நோக்கும் போது, உலகத் தேவையை ஆலைகளால் மட்டுமே சரிசெய்ய முடியவில்லை, கைத்தறிகளும் தேவைப்படுகின்றன என்பதைக் கண்கூடாக உணர்கின்றோம்.

2. சில சமயங்களில் சில ஊர்களில் ஆலைத்துணிகள் மருந்திற்கும் கிடைக்காமையால், கைத்தறித் துணியையே மக்கள் உடுத்துவதைக் காண்கிறோம். இதுவும் கைத்தொழிலின் தேவையை வற்புறுத்தும் சான்றாகும்.

3. தனிப்பட்ட ஒருவர், ஓர் ஆலை முதலாளியிடம் சென்று, பிறர் விரும்பாத ஒரு புது மாதிரியைக் காட்டி, ‘இந்த மாதிரியில் 10 வேட்டியும் சேலையும் வேண்டுமென்று கேட்க முடியாது. ஆனால் ஒரு கைத்தறிக்காரனிடம் சென்று அதைப்போல் தனியாகத் தயாரிக்கச்செய்து பெறமுடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/205&oldid=1203097" இலிருந்து மீள்விக்கப்பட்டது