பக்கம்:தமிழ் அங்காடி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204  தமிழ் அங்காடி


4. இரண்டாவது உலகப்போர் நடைபெற்றபோது ஜப்பான் குண்டு வீச்சால் பல ஆசிய நாடுகளுக்கு ஆலைத் துணிகள் கிடைக்காமற் போனதால், இந்தியாவிலிருந்து - குறிப்பாகச் சென்னைத்துறைமுகத்திலிருந்து எண்ணற்ற கைத்தறித்துணிகள் அந்நாடுகட்கு ஏற்றுமதியாகின. அக்காலத்து நம் கைத்தறித் தொழிலாளிகளும் முதலாளிகளும் முறையே ஆயிரக்கணக்கிலும், நூறாயிரக் கணக்கிலும் இரண்டு மூன்றாண்டுகளில் பொருளிட்டி விட்டனர். அன்றியும், இப்போது வேலைநிறுத்தத்தாலும், மின்சாரக் குறைவாலும் ஆலைகள் மூடப்படுவதை அறிகிறோம். எனவே, போர், வேலைநிறுத்தம், மின்சாரக் குறைவு முதலியவற்றால் ஆலையரக்கன் சோர்ந்த போது, கைத்தறி அமரர்களையே கையேந்தி நிற்கும் உலகம் என்பது கண்கூடு. போர் முதலியவை இனி ஏற்படா என்று ஆருடம் சொல்பவர் யாவர்? குறைந்த நேரத்தில் விரைந்து செல்லும் மோட்டார் வாங்கிக் கொண்டதும், காலே வேண்டாமென்று வெட்டிக் கொண்டவன், கார் பழுதுற்ற போதும் காரை விட்டிறங்கிய பின்பும் என்ன செய்வது? மின்சார விளக்கு நின்று விட்டால் எரிவதற்காக எப்போதும் எண்ணெய் விளக்கையும் தயாராக ஏற்றி வைத்துக் கொண்டிருக்கிறோ மல்லவா?

5. கைத்தொழில் அவசியம் என்பதற்கு மறுக்க முடியாத மற்றொரு காரணமும் சொல்ல முடியும். இயந்திரத் தொழில்களெல்லாம் கைத்தொழில்கள் என்னும் விதைகளிலிருந்து முளைத்தெழுந்தவைகளே! வீட்டைப் பார்த்துத் தானே ஓட்டல் உண்டாயிற்று? கையெழுத்துப் படிகளைப் பார்த்துத் தானே அச்சு நூல்கள் எழுந்தன? கைத்தறிகளைப் பார்த்துத்தானே இயந்திரத் தறிகள் உண்டாயின? எனவே, எந்த இயந்திரத் தொழிலும், அதற்கு முன் அத்தகைய கைத்தொழில் இல்லாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/206&oldid=1203102" இலிருந்து மீள்விக்கப்பட்டது