பக்கம்:தமிழ் அங்காடி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  209


போலவும் இருக்கட்டும் - அதே சமயத்தில் தம்பிக்குப் பெண் பார்த்ததாகவும் இருக்கட்டும்” என்னும் பழமொழிக் கேற்ப இருந்ததல்லவா? இதனை அப்பாட்டிலுள்ள,

“Singing most joyfully
Till the shuttle falls from her hand
And the whizzing wheel stands still.”

என்னும் பகுதியால் அறியலாம்.

நூற்றல் சிறப்பு

இந்நூற்றல் சிறப்பினைப் பல நூற்றாண்டுகட்கு முன்பே, பவணந்தி முனிவர் தாம் எழுதிய 'நன்னூல்’ என்னும் நன்னூலில் தெளிவாகக் கூறியுள்ளார். நூல் எழுதும் புலவனது புலமைத் தொழிலை உயர்ந்ததாக உலகம் மதிப்பது வழக்கம், இதனாலன்றோ, திருவள்ளுவர், கம்பர், காளிதாசர், சேக்சுபியர், தாகூர் போன்ற மாகவிகள் போற்றப்படுகின்றார்கள்? இந்நூலெழுதும் புலமைத் தொழிலுக்குச் சமமாக, பெண்கள் நூல் நூற்கும் தொழிலைக் குறிப்பிட்டுள்ளார் பவணந்தியார். 'நூல் நூற்றல்' எப்படி? என்று சொல்லவந்த அவர், "புலவனாகிய பெண், கவிபாடும் வாயை நூல் நூற்கும் கையாகவும், மதியை நூற்கும் கதிர் (கருவி) ஆகவும் கொண்டு, சொல்லென்னும் பஞ்சை, காவியம் என்னும் நூலாக நூற்கிறாள்” என்று கூறியுள்ளார். இதனை,

“பஞ்சுதன் சொல்லாப் பனுவல் இழையாகச்
செஞ்சொல் புலவனே சேயிழையா - எஞ்சாத
கையே வாயாகக் கதிரே மதியாக
மைஇலா நூல்நூற்கும் ஆறு”

என்னும் நன்னூற் பாடலால் நன்குணரலாம். இங்கே, நூல் நூற்றலை, மை இலா ஆறு - அதாவது குற்றம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/211&oldid=1204344" இலிருந்து மீள்விக்கப்பட்டது