பக்கம்:தமிழ் அங்காடி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  211


புடவை கட்டினாலும் உள்ஸ்ரீப்பு வெளியில் தெரியும்படி யாகவும், பலமுழத்துணிகளை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கும்படியாகவும் மெல்லிய முறையில் நெசவுத் தொழில் செய்துவந்த வல்லுநர்களை, ஆளவந்த அன்னியர் அழுக்காற்றால் அடக்கி (கட்டை விரலை வெட்டி) அழித்தனர் என்ற அந்தரங்க வரலாறு நாம் அறிந்ததே!

இவ்விதம் பருத்தி நூலால் தயாரித்த தல்லாமல், பட்டு நூலாலும், மிருகங்களின் மயிராலுங்கூட பலவிதமான உடை தயாரித்த மக்கள் மதுரையில் இருந்தனர் என்பதை,

                “நூலினும் மயிரினும் நுழைநூல் பட்டினும்
                பால்வகை தெரியாப் பல்நூறு அடுக்கத்து
                நறுமடி செறிந்த அறுவை வீதியும்" (14:205-7)

என்னும் சிலப்பதிகார அடிகளில் சிறக்கக் காணலாம்.

சொந்த உழைப்பு

பழம் பெருமையைப் பேசினால் மட்டும் பயன் கிட்டாது. எளிதாகக் கடையில் காய்கறி வாங்குவதன்றி, வீட்டுத்தோட்டத்திலேயே பயிரிட்ட காய்கறி மனத்திற்கு மகிழ்ச்சி தருவதைப் போல, எளிதாகக் கடையில் வாங்கும் துணியேயன்றி, ஒய்ந்தநேரத்தில் நூல் நூற்றும் - வீட்டிலேயே கைத்தறியமைத்து நெய்தும் உண்டாக்கப்பட்ட உடைகள் ஒரளவு தம் சொந்தத்தேவையைச் சரிசெய்து, மனத்திற்கும் மட்டற்ற மகிழ்ச்சியைத் தருமன்றோ? இவ்விதம் இயன்ற அளவு கிருகத்தில் (வீட்டில்) செய்து கொள் ளு ம் தொழிலான மையாலேயே இத்தொழிற்குக் காருகம் என்ற பெயர் சமசுகிருதத்தில் உண்டு.

ஓர் எண்ணம்

இங்கு ஒர் எண்ணம் தோன்றுகிறது. அது காந்தியடி களின் திட்டத்தை ஒட்டியதுதான். நம் நாட்டிலுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/213&oldid=1204365" இலிருந்து மீள்விக்கப்பட்டது