பக்கம்:தமிழ் அங்காடி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212  தமிழ் அங்காடி


ஒரு சாதாரண குடும்பத்தை எடுத்துக்கொள்வோம். அதில் 3 ஆண்கள் உள்ளனர். 10 ஆண்டுகட்கு முன் அவர்கள் தலைக்கு 2 வேட்டியும், 2 சட்டையும், 2 துண்டும் வைத்திருந்தார்கள். அவர்களின் வீட்டில் கம்பு, கேழ்வரகு, நெல், அரிசி இவைகள் வகைக்கு, 2 கலங்கள் இருந்தன. இப்போது அம்மூவரும் அரை கால்சட்டை,முழு கால்சட்டை, அரை கைசட்டை, முழு கைசட்டை, அதேபோல் ஜிப்பா - சில்க் சட்டைகள் - பனியன், சாதாபாடி, காலர்பாடி, அரை - முழு கோட்டுகள், கைகுட்டை, துண்டு, டவல், விசிறிமடி, டை, 4 முழ - 8 முழ வேட்டிகள், தலைஉடை இப்படி எத்தனையோ வகைகளில்,வகைக்கு 6,8 வைத்திருக்கிறார்கள் வீட்டில் தானியமோ, நேற்று வாங்கி வந்ததும் - நாளைக்குப் போதாததுமான (ரேஷன்) அரிசி மட்டுமே! இப்படியே நாட்டிலுள்ள எல்லாக் குடும்பங்களையும் பெருக்கிப் பார்த்துச் சராசரி எடுத்துக் கொள்ளுங்கள்! உடையினும் உணவே இன்றியமையாதது என்பதை எவரும் மறுக்க முடியாது. அப்படியிருந்தும், மக்கள் உணவினும் உடையையே வீட்டில் துணிக் கடைபோல் வைத்துள்ளனர். இது, உணவைவிட உடையே மிகுதியாக உற்பத்தியாகிறது என்பதைக் காட்டவில்லையா? ஆலையரக்கன் இல்லாவிடின் இவ்வளவு தேவையும் நிறைவாக்க முடியாது என்று சொல்ல முடியாது. கைத்தொழிலைக் கொண்டே தேவையை நிரப்பலாம். அதற்கு அரசின் சார்வு (ஆதரவு) தேவை.

நாம் இப்படியே கைத்தொழிலின் இன்றி யமையாமையைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போமாயின் நம்மைப் பழமைவாதிகள் என ஏளனம் செய்வர். கைத்தொழிலாளர்க்கு ஊறு நேரா வகையில் ஆலைகளும் இயங்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/214&oldid=1204367" இலிருந்து மீள்விக்கப்பட்டது