பக்கம்:தமிழ் அங்காடி.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218  தமிழ் அங்காடி



திருக்குறள்

“தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு” (1103)

திருவாய்மொழி

வெள்ளைச் சுரிசங்கோ டாழி யேந்தித்
தாமரைக் கண்ணன் என்னெஞ்சி னுடே’
(7-3-1)

பரிபாடல் - திருமால்

‘எரிமலர் சினைஇய கண்ணை’ (1-6)

‘கண்ணே புகழ்சால் தாமரை
அலரிணைப் பிணையல்” (2-53)

கிரையிதழ்த் தாமரை அன்ன நாட்டத்து
அளப்பரியை” (நாட்டம் - கண்) - (4-60, 61)

புவ்வத் தாமரை புரையுங் கண்ணன் (15-49)

சேந்தன் திவாகர நிகண்டு

“சக்கரா யுதனே, சங்கம் ஏந்தி,
கருங்கடல் வண்ணன், கமலக் கண்ணன்...
திருமாற்கு அனந்தம் சிறந்ததொல் பெயரே’ (1-2)

பிங்கல நிகண்டு

‘தண்கடல் வண்ணன், சலச விலோசனன்,...
நாராயணன் திருநாம மாகும்” (130)

சூடாமணி கிகண்டு

‘வலவன், தேவகி மைந்தன்,
வனமாலி, படியிடந்தோன்,
சலச லோசனன், அனந்தசயனன்...
அரியின் பேராகும்’ (1-13)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/220&oldid=1210504" இலிருந்து மீள்விக்கப்பட்டது