பக்கம்:தமிழ் அங்காடி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  219



ஆசிரிய கெண்டு

        “காகுத்தன், அச்சுதன், சாரங்க பாணி,
        கமலக் கண்ணன், மேகவண்ணன்" (1-3)

திருமாலுக்கு, தாமரைக் கண்ணான், தாமரைக் கண்ணன், தாமரை புரையுங் கண்ணன், கமலக்கண்ணன், சலசவிலோசனன், சலச லோசனன் என்னும் பெயர்கள் உள்ளமையை மேற்கூறியுள்ள பாடல் பகுதிகளால் அறியலாம். கமலம், சலசம் என்றால் தாமரை, விலோசனம் லோசனம் என்றால் கண். இவையேயன்றிப் புண்டரீகாட்சன் என்ற பெயரும் மாலுக்கு உண்டு. புண்டரீகம் என்றால் தாமரை; அட்சன் என்றால் கண்ணையுடையவன் - தாமரை போன்ற கண்ணையுடையவன் என்பது இப்பெயரின் பொருள். இப்பெயர்,

                "போய பேரொளி யடைத்து வைத்தபல
                புண்டரீகம் இருபொற் குழை" 22

என்னும் தக்கயாகப் பரணிப் பாடலின் உரையில், "புண்டரீகம் என்பது செந்தாமரைக்குப் பெயர்; புண்டரீ காட்சன் என்ப” என எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. உலகியலில் சிலர்க்குச் செந்தாமரைக் கண்ணன், கமலக் கண்ணன் என்னும் பெயர்கள் வைக்கப்பட்டிருப்பது ஈண்டு ஒப்பு நோக்கற் பாலது.

கண்ணே தாமரை

இதுகாறும் திருமாலின் கண்ணுக்குத் தாமரை உவமை என்பதாகப் பேசப்பட்டது. திருமாலின் கண்ணே தாமரை தான் என்று உருவகிக்கும் அளவில் புராணக் கதை ஒன்று சொல்லப்படுகிறது. அஃதாவது:

சிவபெருமானிடமிருந்து ஆழி (சக்கரம்) பெறுவதற்காக, திருமால் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு சிவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/221&oldid=1204382" இலிருந்து மீள்விக்கப்பட்டது