பக்கம்:தமிழ் அங்காடி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222  தமிழ் அங்காடி


கரிய கண்கள் சினத்தால் செங்குவளைபோல் சிவந்து விட்டனவோ)

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் (நீராடல் பருவம்)

‘நீலக் கருங்குவளை செங்குவளை பூப்பவறல்

நெறிகுழற் கற்றை சரிய......
புதுவெள்ள நீராடி யருளே’ (84)

(கருங்குவளையாகிய கரிய நின் கண்கள் செங்குவளையாகச் சிவக்கும் அளவு நீராடுக. இங்கே கண்கள் குவளையாக உருவகிக்கப் பட்டுள்ளன).

மாதவச் சிவஞான சுவாமிகளின்

அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்

                                                காப்புப் பருவம் (9)

”புண்டரீகம் பூங்குவளை முகமெனப் போர் கொண்ட வாள் விழியெனத்

தாங்கும் குளந்தா புரிக்குள் அமுதைக் காக்கவே”

(தாமரை முகம்; குவளை விழி)

                                     நீராடல் பருவம் (44) 

“விற் புருவங் குழையக் கருநீல
விழித்துணை செங்குவளை வெல்ல...
புதுநீ ராடுகவே”

(கரு நீலம் = கரிய நீலோற்பலம் = கருங் குவளை; விழித்துணை=இரு கண்கள். கருங் குவளை போன்ற நின் கரிய கண்கள் செங்குவளைபோல் சிவப்பாக மாறும்படிப் புதுநீ ராடுக.)

வைத்தியநாத தேசிகரின் கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ்

”பானல் தடங்கண்ணி யாடலிற் செங்கைப்

                    பரமன்” (82)

(பானல் = குவளை, குவளைக் கண்ணுடையவள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/224&oldid=1209747" இலிருந்து மீள்விக்கப்பட்டது