பக்கம்:தமிழ் அங்காடி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  225



அடி; அடியால் ஆனது செய்யுள். இந்த விவரங்களை முன்னமேயே அறிந்திருப்பாய் என எண்ணுகிறேன்.

மா: ஆம் ஐயா. அசை, சீர், தளை, தேமா முதலிய வாய்பாடுகள் முதலியன பற்றி ஒரளவு தெரியும் ஐயா. இப்போது பாக்களின் வகைகளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

ஆ: பாக்கள், வெண்பா - ஆசிரியப்பா - கலிப்பா - வஞ்சிப்பா என நான்கு வகைப்படும். முதலில் வெண்பாவும் அடுத்து ஆசிரியமும் கலந்து வருவது மருட்பா எனப்படும்.

மா: ஒவ்வொரு பாவைப் பற்றியும் விளக்க வேண்டுகிறேன்.

ஆ: இந்தக் குறுகிய நேரத்தில் விரிவாக விளக்க முடியாது. பொதுவாக ஒரு சுருக்கத் தலைப்பே தரவியலும்.

மா: அப்படியே செய்யுங்கள் ஐயா.

ஆ: சரி - இயற்சீர் வெண்டளையாலும் வெண்சீர் வெண்டளையாலும் வருவது வெண்பா. நேரொன்று ஆசிரியத் தளையாலும் நிரையொன்று ஆசிரியத் தளையாலும் வருவது ஆசிரியப்பா. கலித்தளையால் அமைவது கலிப்பா. ஒன்றிய வஞ்சித்தளையாலும் ஒன்றாத வஞ்சித்தளையாலும் இயற்றப்படுவது வஞ்சிப்பா.

மா: பாக்களின் ஒசைகளைப் பற்றியும் கூறுங்கள் ஐயா.

ஆ: ஒவ்வொரு வகையான பாடலையும் பாடினால், ஒவ்வொரு வகையான ஓசை காதுக்குப் புலனாகும். வெண் பாவின் ஒசை 'செப்பல்' ஓசை; ஆசிரியப்பாவின் ஒசை ‘அகவல்' ஓசை; கலிப்பாவின் ஒசை 'துள்ளல்' ஓசை; வஞ்சிப் பாவின் ஒசை 'துங்கல்' ஒசை தெரிகிறதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/227&oldid=1204394" இலிருந்து மீள்விக்கப்பட்டது