பக்கம்:தமிழ் அங்காடி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சுந்தர சண்முகனார் 21


பெரிய நிறுவனமாக உருவாகிப் பெரு வளர்ச்சி பெற்றுள்ளது.

ராய் இலண்டன் வேதியியல் கழகத்தின் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு உயர்வு பெற்றார். ‘இந்திய அரசின் கூட்டாளி' என்னும் தகுதியை இந்திய அரசு ராய்க்கு அளித்தது.

கண்டு பிடிப்பு

ராய் 1895 ஆம் ஆண்டு பாதரசத்திரேதம் கண்டு பிடித்தார். இது அனைத்துலகினராலும் பாராட்டப் பெற்றது. இவரது வேதியியல் ஆய்வுக்கூடம் பலவகையான ஆராய்ச்சிகட்கு இடம் தந்தது.

ராய் தம் மாணாக்கர்கட்கும் இந்தத் துறையில் நல்ல பயிற்சி அளித்தார். இவரும் மாணாக்கர்களும் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலகு அளாவிய அளவில் பல ஆராய்ச்சியாளர்கட்குப் பாதை அமைத்துக் கொடுத்தன.

பலரும் கல்வித் துறையில் - ஆராய்ச்சியின் வாயிலாக ஈட்டிய பொருளைத் தம் வழிமுறையினருக்கு உரிமையாக்கி வைத்துச் செல்வர். உலகில் பிறர் நலம் பேணுபவர்நாட்டு நலம் நாடுபவர் மிகச் சிலரேயாவர். ஆனால் ராய், தம் அறிவாற்றலால் ஈட்டிய உடைமைகள் அனைத்தையும் கல்கத்தா பல்கலைக் கழகத்திற்கே உரிமை யாக்கி விட்டார்.

‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’. ராய் 800 உருபாவைக் கொண்டு தொடங்கிய வேதியியல் ஆராய்ச்சியின் தொடக்க நிலைக்கும், பல கோடி உரூபா பெறுமானம் உடையதா யிருக்கும் இப்போதைய நிலைக்கும் இடையே உள்ள நிலைமை, ராயின் அரிய பெரிய உழைப்பை அனைத்துலகுக்கும் அறிமுகம் செய்து கொண்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/23&oldid=1203077" இலிருந்து மீள்விக்கப்பட்டது