பக்கம்:தமிழ் அங்காடி.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230  தமிழ் அங்காடி


முதலியோர் கட்டளைக் கலித்துறைப் பாக்கள் பாடியுள்ளனர். கோவை நூல்கள் அனைத்தும் கட்டளைக் கலித்துறை ஆக்கமே.

பிற்காலத்தில் சிந்து, கீர்த்தனம், கண்ணிகள் முதலிய பல்வேறு வகைப் பாடல்கள் எழுந்தன. இக்காலப் பாடல்கள் சில, இயற்றுபவரின் கைவண்ணப்படியே பல்வேறு வடிவங்களில் உள்ளன.

மா: உண்மைதான் ஐயா. பாடல்களைப் பண்டைக் கால மரபுப்படி இப்படி - இப்படித்தான் இயற்றவேண்டும் என்பது கட்டாயமா ஐயா? வளர்ந்து வரும் மொழியில் புதுப் புது மாதிரிகள் எழுவது இயற்கை தானே?

ஆ: நன்றாய்க் கேட்டாய் தம்பி. பழைய மரபுக் கவிதைகளில் ஏற்றனவற்றைக் கொள்ளலாம். பிற்காலப் பாடல்களில் ஏலாதனவற்றைத் தள்ளலாம். புதுக்கவிதை என்பது, முற்றிலும் உரைநடையா யில்லாமல், ஒரளவேனும் ஒசை நயம் உடையதாய் இருப்பின் ஏற்றுக் கொள்ளலாம்.

மா: ஆம் ஐயா.

ஆ: இவ்வளவு நேரம் சொன்னது, யாப்பிலக்கணம் பற்றிய ஒரு சுருக்கத் தொகுப்பே. நினைவில் வைத்துக் கொள்க.

மா: நல்லது ஐயா, நன்றி - வணக்கம்.

19. அணி யிலக்கண அறிமுகம்

மாணாக்கன்: வணக்கம் ஐயா!

ஆசிரியர்: வணக்கம். வருக, அமர்க, இன்றைக்கு அணியிலக்கணம் பற்றிப் பார்க்கலாமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/232&oldid=1204409" இலிருந்து மீள்விக்கப்பட்டது