பக்கம்:தமிழ் அங்காடி.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  235



ஆ: உவமையிலிருந்து உருவகம் பிறந்ததைப் பார்த்தோம். இப்படியே பல அணிகள் உவமையைப் பிறப்பிடமாகக் கொண்டுள்ளன. உவமையைப் புலவர்களே - கவிஞர்களே தம் எழுத்துப் படைப்பில் கையாள்வதாக எண்ணக் கூடாது. படிப்பறியாத பாமரப் பொதுமக்களுங் கூட, நிரம்ப உவமையைக் கையாண்டு பேசுகின்றனர். சிலர் எடுத்ததற்கெல்லாம் ஏதாவது ஓர் ஒப்புமை கூறுவார்கள். திடீரென எந்த ஒப்புமையும் நினைவுக்கு வராவிடின், “என்னமோ சொல்லுவாங்களே - அதுபோல" - என்றாவது உவமையின் சாயல் தெரியச் சொல்லுவார்கள்.

மா: உண்மைதானையா!

ஆ: ஒரு சுவையான செய்தி சொல்கிறேன் - கேள்.

மா: சொல்லுங்கள் ஐயா!

ஆ: நான் ஒரு சிற்றுாரில் ஒரு நாட்டு மருத்துவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு நாள் காலை, பெண்ணொருத்தி, இடுப்பில் ஒரு சிறு குழந்தையை ஏந்தி அணைத்துக் கொண்டும், கையில் ஒரு பெரிய குழந்தையைப் பிடித்துக் கொண்டும் நாட்டு மருத்துவரிடம் வந்தாள். என்ன நோய் என்று மருத்துவர் கேட்டதும், அப்பெண் பின்வருமாறு கூறினாள்:- இடுப்புக் குழந்தையைச் சுட்டிக் காட்டி, “இதற்கு இரவெல்லாம் ஈயச்சட்டி காய்ந்தாற் போல் காய்ந்தது” என்றும், பிறகு கையில் பிடித்திருந்த குழந்தையைச் சுட்டிக்காட்டி, “இதற்கு இராத்திரியெல்லாம் பெருச்சாளிக்கு இரைத்ததுபோல் இரைத்தது” என்றும் கூறினாள்.

மா: வேடிக்கையா யிருக்கிறதே.

ஆ: இந்தப் பெண்ணின் பேச்சில் இரண்டு உவமைகள் இருப்பதை அறியலாம். ஒரு குழந்தைக்கு இரவெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/237&oldid=1204419" இலிருந்து மீள்விக்கப்பட்டது