பக்கம்:தமிழ் அங்காடி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22 தமிழ் அங்காடி


பல கல்விக் கூடங்களிலும் மாறி மாறிச் சேர்ந்து கல்வி கற்று ஆய்வு செய்து ராய் உயர்வு பெற்றிருக்கும் வரலாற்றை இன்றைய மாணாக்கர் உலகம் அறிந்து அதற்கு ஏற்றபடி செயலாற்ற வேண்டும்.

ஒரளவு உடல் நலம் குன்றியவராகிய ராய் 1944 ஆம் ஆண்டு சூன் 16 ஆம் நாள் எண்பத்து மூன்றாம் அகவையில் என்றும் நிலைத்ததான ஒய்வு பெற்றார்.

5. நெருப்பை அறியாது மூட்டிய நீர்

அறிமுகம்

நெருப்பும் நீரும் எதிர் எதிரான பொருள்கள். நெருப்பை நீர் அணைத்துவிடும். நெருப்பை எரியும்படி நெருப்பாலேயே செய்ய முடியும். நெய், பெட்ரோல் போன்ற பொருள்களை மேலே விட்டால் மீண்டும் நன்கு மூண்டு எரியும்.

ஒரு நெருப்பை நீர் முட்டியுள்ளது. ஆனால் அந்த நீருக்குத் தன்னால் நெருப்பு மூளும் என்று தெரியாது. அது என்னவோ செய்தது. அந்தச் செயல், தற்செயலாக, நெருப்பு மூள்வதற்குக் காரணமாய் விட்டது.

அந்த நீராக உருவகிக்கப்பட்டவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein) என்பவர். அவரால் மூண்ட நெருப்பு எது? அது எவ்வாறு - ஏன் மூண்டது? இதுபற்றி அறிய அவரது வரலாற்றைக் காணவேண்டும்.

பிறப்பு வளர்ப்பு

இவர் தெற்கு செர்மனியில் ஊல்ம் (UIm) என்னும் சிற்றுாரில் 1879 மார்ச் 14ஆம் நாள் பிறந்தார். தந்தை பெயர் ஹெர்மன் ஐன்ஸ் டீன் - தாய் பெயர் பாலைன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/24&oldid=1203078" இலிருந்து மீள்விக்கப்பட்டது