பக்கம்:தமிழ் அங்காடி.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238  தமிழ் அங்காடி


மா: சுவையான செய்தி ஐயா.

ஆ: அவர் அறிவுறுத்தியபடி என் உடம்பாகிய வண்டியை ஒருவாறு ஓட்டிக்கொண்டிருக்கிறேன். சரி, அணி பற்றி இன்னும் ஒன்று சொல்லவேண்டும். சிலர் சொல் விளையாட்டில் சுவை காண்பார்கள். அத்தகையன ‘சொல்லணி' எனப்படும். பொருளில் - அதாவது - கருத்தில் சுவை காண்பது 'பொருளணி’ எனப்படும். சொல்லணியினும் பொருளணியே சிறப்புடையது.

மா: ஆம் ஐயா.

ஆ: இங்கே இதுவரை கூறியது, அணியிலக்கணம் பற்றிய ஒரு சுருக்கத் தொகுப்பேயாகும். பிறகு விரிவாகப் படிக்கலாம்.

மா: நல்லதையா. நன்றி. வணக்கம்.

20. தமிழ் இலக்கணச் செழுமை

1. தோற்றுவாய்

“கண்ணுதல் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுங் தமிழ் ஏனை மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப்படக் கிடந்ததோ எண்ணவும் படுமோ” (57)

  • என்பது பரஞ்சோதியாரின் திருவிளையாடல் புராணப் பாடல். ‘தமிழ் இலக்கணச் செழுமை' என்னும் தலைப்பு இந்தப் பாடலில் பொதிந்து கிடக்கிறது. 'பசுந் தமிழ்’, ‘இலக்கண வரம்பு’ என்னும் தொடர்களைத்தான் குறிப்பிடுகிறேன்.

  • பரஞ்சோதியாரின் திருவிளையாடல் புராணம் - நாட்டுப்

படலம் - 37.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/240&oldid=1204425" இலிருந்து மீள்விக்கப்பட்டது