பக்கம்:தமிழ் அங்காடி.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  239


இலக்கண வரம்பின்றி, வாளா எண்ணிக்கைக்குப் பயன்படும் சில மொழிகளைப் போன்ற தன்று தமிழ். ‘பத்தோடு பதினொன்று - அத்தோடு இது ஒன்று’ என்ற முறையில், இலக்கணச் செழுமை யில்லாத மொழிகளோடு சேர்த்து எண்ணப்படக் கூடிய மொழியன்று தமிழ்.

தமிழ் இலக்கணச் செழுமை அனைத்தையும் குறிப்பிட்ட சிறிதளவு நேரத்தில் - சிறிதளவு பக்கங்களில் நிறைவுறத் தெரிவித்துவிட முடியாது. இனித் தமிழின் பெருமையைப் பேசாமல் தமிழ் இலக்கணச் செழுமைகள் சிலவற்றைச் சுருங்கக் காண்பாம்:

2. நூல்கள் (இயல் தமிழ்)

தமிழ் இலக்கணச் செழுமைகளுள் தமிழ் இலக்கண நூல்கட்குப் பெரும்பங்கு உண்டு. அந்நூல்கள் வருமாறு:-

2.1 அகத்தியம்

நீண்ட தமிழால் உவகை நேமியின் அளந்தவரும் என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டவரும் ஆகிய அகத்தியர் இயற்றிய அகத்தியம் என்னும் நூல் முதல் இலக்கண நூலாக அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. முழு நூலும் கிடைக்கவில்லை. இந்நூலின் சில பாக்கள் மட்டும் உரையாசிரியர்களின் உரைகளில் எடுத்தாளப்பட் டுள்ளன. அகத்தியமே முதல் நூலாக இருக்கும் என்று திட்ட வட்டமாகச் சொல்வதற்கும் தொல்காப்பியத்தில் சான்று இல்லை. புறப் பொருள் வெண்பாமாலை என்னும் நூலின் சிறப்புப்பாயிரச் செய்யுளில் உள்ள -

“மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன்
தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/241&oldid=1204426" இலிருந்து மீள்விக்கப்பட்டது