பக்கம்:தமிழ் அங்காடி.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242  தமிழ் அங்காடி



சுப்பிரமணிய தீட்சதரின் பிரயோக விவேகம்.

பாம்பன் சுவாமிகளின் பல்சந்தப் பரிமளம், வண்ண இயல்.

குமரகுருபரரின் சிதம்பரச் செய்யுள் கோவை.

பொய்கையார் - பரணர் முதலிய பன்னிருவர் எழுதிய பன்னிரு பாட்டியல்.

மாமூலரின் மாமூலர் பாட்டியல்.

நேமிநாதரின் வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியல்.

நவநீதநடர் என்னும் அரிபத்தரின் நவநீதப் பாட்டியல்.

பரஞ்சோதியாரின் சிதம்பரப் பாட்டியல்.

சம்பந்தரின் சம்பந்தப் பாட்டியல் என்னும் வரையறுத்த பாட்டியல்.

மற்றும், விருத்தப்பாவியல், மாபுராணம், பூதபுராணம் முதலியன.

மேலும் பிற்காலத்தில் உரைநடையில் பல்வேறு தமிழ் அறிஞர்கள் எழுதியுள்ள இலக்கண நூல்களும் உண்டு. அவற்றுள் விசாகப் பெருமாள் ஐயரின் பஞ்ச இலக்கண வினாவிடை, ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம் போன்றவை குறிப்பிடத் தக்கன.

2.6 அகப்பொருள் இலக்கணம்

தமிழ்மொழியில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் அகப்பொருள் இலக்கணம், வேறு மொழிகளில் இல்லை - தமிழ் மொழியில் மட்டுமே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இஃதும் தமிழ் இலக்கணத்திற்குச் செழுமை அளிப்பதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/244&oldid=1204432" இலிருந்து மீள்விக்கப்பட்டது