பக்கம்:தமிழ் அங்காடி.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244  தமிழ் அங்காடி


முதலிய இசை தொடர்பான இலக்கணச் செய்திகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

மற்றும், கானல்வரி, வேனில் காதை, புறஞ்சேரி இறுத்த காதை, நடுகல் காதை முதலிய காதைகளிலும் இசை தொடர்பான செய்திகள் இடம்பெற்றுள்ளன.

சிலம்பு - ஆய்ச்சியர் குரவையிலும் இசைச் செய்தி இடம் பெற்றுள்ளது. மாதரி கன்னியர் எழுவர்க்குக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் இசை தொடர்பான பெயர்களை இட்டாளாம். பாடல் :

“தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார்
எழுவர் இளங்கோதையார்
என்று தன் மகளை நோக்கி
இடை முதுமகள் இவர்க்குப்
படைத்துக் கோட் பெயரிடுவாள்
குடமுதல் இடை முறையாக் குரல், துத்தம்,
கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே"

இது பாடல் பகுதி. இக் காலத்தில் கூறும் ச, ரி, க, ம, ப, த, நி எனச் சுருக்கமாக வழங்கப்பெறும் சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷதம், என்னும் ஏழுக்கு மாற்றாகக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழு பெயர்களும் கூறப்பட்டன - என்பது ஆராய்ச்சியாளர் சிலரின் கருத்து. ஆனால், இது பற்றி விபுலாநந்த அடிகள் தம் யாழ் நூலில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்.

மற்றும், சங்க இலக்கியமாகிய பரிபாடல் பாடல்கள் பலவற்றிற்கும், தேவாரப் பாடல்கட்கும் திவ்வியப் பிரபந்தப் பாடல்கட்கும் பண்கள் அமைக்கப்பட்டுள்ளமை ஈண்டு எண்ணத்தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/246&oldid=1204438" இலிருந்து மீள்விக்கப்பட்டது