பக்கம்:தமிழ் அங்காடி.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  251


எனவே, 'குன்றிசை', 'இசை கெடின்’ என்றெல்லாம் இலக்கண ஆசிரியர்கள் கூறியிருப்பது தவறாகும்.

பொருள் கருதி எழுந்த அளபெடையும், தமிழ் இலக்கணச் செழுமையின் ஒரு கூறாகும்.

5.3 சிறப்புப் பன்மை

ஒருவன், ஒருத்தி என ஓர் ஆண் மகனையும் ஒரு பெண் மகளையும் முறையே குறிப்பதுண்டு. ஒரளவு சிறப்புக்கு உரிய இருபாலாரையும் 'ஒருவர்' என்னும் சிறப்புப் பன்மைச் சொல்லால் குறிப்பிடுவதும் தமிழ் இலக்கணச் செழுமையேயாகும். ஆங்கிலத்தில் யாராயிருப்பினும் he, she என முறையே குறிப்பிடுகின்றனர். இங்கே சிறந்தவரைக் குறிப்பிட, சொற்றொடரின் நடுவிலே Him, Her எனப் பெரிய எழுத்தால் குறிப்பிடுகின்றனர். இதனினும் ஒருவர் என்னும் தமிழ் வழக்கு சிறந்தது.

ஆங்கிலத்தில் முன்னிலையில் ஒருவரைக் குறிப்ப தாயினும் பலரைக் குறிப்பதாயினும் you என்னும் ஒரு சொல்லே பயன்படுத்தப்படுகிறது. தமிழில் ஒருவரைக் குறிக்க 'நீ' என்பதும், பலரைக் குறிக்க நீர்-நீவிர்-நீங்கள் என்னும் சொற்களும் தனித் தனியே இருப்பதும் ஒருவகை இலக்கணச் செழுமையே.

தமிழில் ஒருவரையே சிறப்பு கருதி முன்னிலையில் நீங்கள் எனவும், படர்க்கையில் ஒருவரையே அவர்-அவர்கள் எனவும் சிறப்புப் பன்மையால் குறிக்கிறோம். இதுவும் ஒரு செழுமையே. ..

ஆனால், ஆங்கிலேயர்கள் இதில் ஒருவகைக் குறை கூறுகின்றனராம் அதாவது:- குறிப்பிட்ட ஒருவரை நீ, அவ்ன், அவள் என ஒருமையில் சுட்டுவதும், குறிப்பிட்ட வேறொருவரை நீங்கள், அவர்கள் எனப் பன்மையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/253&oldid=1204451" இலிருந்து மீள்விக்கப்பட்டது