பக்கம்:தமிழ் அங்காடி.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252  தமிழ் அங்காடி


சுட்டுவதும், மக்களுக்குள் உயர்வு தாழ்வு கருதும் குறுகிய மனப்பான்மையைக் காட்டுகிறது - என்று கூறுகின்றனராம். இவர்கள் கூறுவது பொருத்தமின்று. அகவை முதிர்ச்சிக்கு உரிய சிறப்பு தருவதில் தவறில்லை. மற்றும் இங்கே,

                "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
                செய்தொழில் வேற்றுமை யான்”

என்னும் திருக்குறளைக் குறைசொல்வோர்க்கு அறிவிக்க வேண்டும்.

மற்றும் அல்லன், அல்லள், அல்லர், அன்று, அல்ல - என்னும் ஐம்பால் முற்றுகளும், எல்லேமும், எல்லீரும், எல்லாரும் - என்னும் மூவிடப் பெயர்களும் தமிழின் இலக்கணச் செழுமைகளே. ஆனால், இப்போது, அல்ல, எல்லாரும் என்னும் சொற்களையே பொதுவாகப் பயன்படுத்தலாம் என ஒரு சாரார் கூறுகின்றனர். தமிழ் இலக்கணத்திலும் பொது முடிபு உண்டு. அவை: வேறு, இல்லை, உண்டு, வேண்டும், தகும், படும் - முதலியன.

தமிழில் இன்னின்ன எழுத்துகள் சொல்லின் முதலிலும் இன்னின்ன எழுத்துகள் சொல்லின் இறுதியிலும் வாரா எனப்பட்டுள்ளன. இது, ஒலிப்பில் இனிமைச் செழுமை தருகிறது. மெய்ம்மயக்க விதியும் இத்தகையதே.

5.4 முற்றெச்சம்

'முகந்தனர் கொடுப்பப் பெற்றனர்' என்பதில் உள்ள ‘முகந்தனர்’ என்னும் வினைமுற்று, 'முகந்து' என்னும் வினையெச்சப் பொருள் தருகிறது. 'இன்னியம் இயக்கினர் செல்க’ என்பதில் உள்ள 'இயக்கினர்' என்னும் வினைமுற்று, ‘இயக்கி என்னும் வினையெச்சப் பொருள் தருகிறது. இதற்குத்தான் 'முற்றெச்சம்' என்பது பெயர். முற்று எச்சப் பொருள் தருவது முற்றெச்சம். இந்த முற்றெச்சம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/254&oldid=1204453" இலிருந்து மீள்விக்கப்பட்டது