பக்கம்:தமிழ் அங்காடி.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  257


போது, பேச்சு வடிவத்தைத் தவிர வேறு வடிவம் இல்லையல்லவா? அதனால், பேச்சு வழக்கே எழுத்து வழக்காயிற்று.

இந்தக் கருத்தை ஓர் எடுத்துக்காட்டின் வாயிலாக விளக்கலாம்: 'தலை’ என்னும் சொல்லை முதல் முதல் தமிழில் எழுதியபோது 'தலை’ என்றே மக்கள் பேசியிருப்பர். ஆனால், இப்போது பேச்சு வழக்கில் கொச்சையாகத் 'தல’ என்கின்றனர். தமிழில் “தல” என்பது பேச்சு வழக்கு. ஆனால், தெலுங்கில் “தல” என்பதும், கன்னடத்தில் ‘தலெ’ தல என்பதும் எழுத்து என்பதும், மலையாளத்தில் வழக்குகளாகும்.

இதிலிருந்து தெரிவதாவது: தெலுங்கில் 'தல' என்பதும் கன்னடத்தில் 'தலெ’ என்பதும் மலையாளத்தில் “தல” என்பதும் எழுதப்பட்டபோது, அவை அவ்வாறே பேசப் பட்டிருக்க வேண்டும் - என்பதாகும்.

இப்போது எழுதப்படும் தமிழ் வடிவம், தொடக்கத்தில் பேசப்பட்ட போதிருந்த தமிழ் வடிவமேயாகும். நாளடைவில் அவ்வடிவம், மூலைக்கு மூலை ஒவ்வொரு விதமாய்ச் சிதைத்துக் கொச்சையாகப் பேசப்பட்டபோது, அந்தக் கொச்சை வடிவங்கள் அவ்வாறே எழுதப்பட்டு வெவ்வேறு மொழிகளாயின.

ஆகவே ஆங்காங்கே பேசப்பட்ட மொழிக் கூறுகள் கொடுந் தமிழாயின - அவ்வப் பகுதிகள் கொடுந் தமிழ் நிலங்களாயின. இந்த நிலை, ஆயிர மாயிரம் ஆண்டுகட்கு முன் தொல்காப்பியர் காலத்திலேயே ஏற்பட்டுவிட்டது.

தொல்காப்பியர் காலத்திற்குப் பின், இவ்வளவு காலமாகக் கொச்சைப் பேச்சுருவம் ஆங்காங்கே ஏற்பட்டிருந்தும், குமரி முதல் வேங்கடம் வரை, கொடுந்தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/259&oldid=1204464" இலிருந்து மீள்விக்கப்பட்டது