பக்கம்:தமிழ் அங்காடி.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  263



ஆங்கில மொழியில் செய்ய வேண்டிய சீர்திருத்த அளவுக்குத் தமிழில் சீர்திருத்தம் செய்ய வேண்டிய வருந்தத்தக்க நிலை இல்லை. தமிழ் சீர்திருத்தமான மொழி என்பதைச் 'செந்தமிழ்' என்னும் பெயரிலுள்ள ‘செம்’ என்னும் அடைச்சொல் அறிவிக்கின்ற தன்றோ? தமிழில் ஏதாவது சீர்திருத்தம் செய்யவேண்டுமெனில், சீர்திருத்தம் என்னும் பெயரில் இப்போது சிலர் கெடுத்து வைத்துள்ள குறைபாடுகளை மீண்டும் சீர்திருத்தம் (Reformation) செய்து பழைய நிலைக்குக் கொண்டு வருவதேயாகும். நிறைவாக ஒன்று:- செய்யுள் எளிய நடையில் எழுதப்படவேண்டும் என்கின்றனர். நல்ல உரை நடைப் பகுதிகளைச் சுவைத்துப் படிப்பது போலவே, உரை நடைக்கும் செய்யுள் நடைக்கும் இடைப்பட்ட தான புதுக்கவிதையையும் சுவைத்துப் படித்து அதற்கும் வழி விடலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/265&oldid=1204477" இலிருந்து மீள்விக்கப்பட்டது