பக்கம்:தமிழ் அங்காடி.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264  தமிழ் அங்காடி



அறவுரைப் பகுதி


22. அணுவுக்குள் ஆழ்கடல்


தமிழ் இனிமை

                "தேருந்தொறும் இனிதாம் செந்தமிழ்
                    போன்று இவள் செங்கனிவாய்
                ஆருந்தொறும் இனிதாய் அமிழ்தாம்
                    எனது ஆருயிர்க்கே” (59)

என்று தஞ்சைவாணன் கோவை என்னும் நூலில் பொய்யாமொழிப் புலவர் புகன்றுள்ளார்.

        "மங்கை ஒருத்தி தரும் சுகமும் எங்கள் மாதமிழ்க்கு
                                                        ஈடில்லை”

என்று பாடினார் பாவேந்தர் பாரதிதாசன்.

தமிழ் இனியது என்றால், தமிழ்நூல்கள் இனியவை என்பது கருத்து. தமிழ் நூல்கள் இனியவை என்பதற்கு ஒரு சான்றாயினும் தரவேண்டுமல்லவா? எந்த நூலை எடுத்துக் கொள்ளலாம்? உலகளாவிய ஒரு நூலை எடுத்துக் கொள்வது சாலப் பொருந்து மன்றோ?

உலகநூல்

அத்தகையதொரு தமிழ்நூலைத் தேர்ந்தெடுப்பது அரிது அன்று: எளிது - மிகவும் எளிது. அந்த வேலையை உலகம் நமக்குத் தரவில்லை. அதை முன்னமேயே உலகம் செய்து முடித்துவிட்டது. அந்த உலகறிந்த நூலை ஏறக்குறைய ஒரீராயிரம் ஆண்டுகட்கு முன்பே, சங்கத்தமிழ்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/266&oldid=1204480" இலிருந்து மீள்விக்கப்பட்டது